வவுனியா வாசிகளிற்கு எச்சரிக்கை: நூதன ‘மரை இறைச்சி’ திருடன்!

Date:

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் இன்று (27) மரை இறைச்சி தருவதாக கூறி பணத்தை ஏமாற்றி சென்ற நபர் அங்கிருந்த கண்காணிப்பு கமராவில் சிக்கியுள்ளார்.

குறித்த நபர் முன்னரும் வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள வீடுகளிற்கு சென்று மரை இறைச்சி தன்னிடம் உள்ளதாகவும் ஒருகிலோ 800 ரூபாய் என்றும் தெரிவித்து மரை இறைச்சி தருவதாக கூறி 15ற்கும் மேற்பட்ட குடும்பங்களிடம் பணத்தை சேகரித்து இறைச்சியினை வழங்காமல் ஏமாற்றியுள்ளார். இதனை நம்பிய பலர் குறித்த நபரிடம் ஆயிரக்கணக்கில் பணத்தினை வழங்கியுள்ளனர்.

எனினும் நீண்ட நாளாகியும் பணத்தினை வழங்கியவர்களிற்கு இறைச்சியும் வழங்கப்படவில்லை, பணத்தினையும் கொடுக்கவில்லை. குறித்த நபர் தம்மை ஏமாற்றியுள்ளதை பின்னரே உணர்ந்தனர்.

எனவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக மக்கள் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், வேட்டையாட தடைவிதிக்கப்பட்ட காட்டுயிர்களின் இறைச்சிகளை சட்டவிரோதமாக பெறும் நடவடிக்கையையும் பொதுமக்கள் நிறுத்த வேண்டும்.

spot_imgspot_img

More like this
Related

‘எனது கணவர்… மன்னிக்கவும், எனது ஜனாதிபதி’: இணையத்தில் கிண்டலடிக்கப்படும் வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர்!

கரோலின் லெவிட் (Karoline Leavitt) என்பவருக்குப் பதிலாக வெள்ளை மாளிகையின் புதிய...

கொளத்தூரில் ஸ்டாலின் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார்: திருமாவளவன் பேச்சு!

“கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெறுவது கடினம் என ஸ்டாலினிடம் முன்பே சொன்னேன்....

சிஜேபியின் ‘மூவர்ணக் கொடி’ போராட்டத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி டெல்லியில் நாளை (அக்.16) நடத்த உள்ள மூவர்ணக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்