கதற கதற வீதியில் விரட்டி விரட்டி தாக்குதல்: அண்ணனும், மகனும் அகோரம்; தம்பிக்கு நேர்ந்த கதி!

Date:

யாழ்.கோப்பாய் இராசபாதை வீதியில் அண்ணன், அண்ணன் மகன் இருவரின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு இலக்காகி தம்பியின் கை முறிந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை (24) காலை இடம்பெற்றுள்ளது.

அடி தாங்க முடியாமல் தம்பி கத்திக் கொண்டு தோட்ட வெளியில் ஓடியுள்ளார். தொடர்ந்து விரட்டி விரட்டி தம்பி என்று கூடப் பார்க்காமல் இருவரும் சேர்ந்து அடித்துள்ளனர். அதனைப் பார்த்தவர்கள். அடிப்பதை நிறுத்துமாறும் கூறிய போதும் அவர்களின் சொல்லைக் கூட கருத்தில் எடுக்காமல் கைமுறியும் அளவுக்கு கோடரிப்பிடியால் அடித்துள்ளனர்.

மா.கந்தகுமார் (65) என்பவரே இருவரின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகி இடது கை முறிந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

தோட்ட வேலைகளில் ஈடுபடும் தம்பியை தனது தோட்ட வேலைகளுக்கு பயன்படுத்துவது மட்டுமல்ல அதற்கான ஊதியத்தை தம்பிக்கு அண்ணன் வழங்குவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் ஏன் மேற்கொள்ளப்பட்டது என்ற காரணம் தெரியவில்லை.

இதற்கு முன்னரும் இரு தடவைகள் இவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கல்முனையில் “எமக்கான சமூக நீதி எழட்டும்” ஊடகவியலாளர் சந்திப்பு

முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும், சமூக உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்களின்...

கல்முனை பொலிஸ் நிலையத்தில் 2026ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அணிவகுப்பு மற்றும் பரிசோதனை

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2026 ஆம்...

‘விமானத்தை வீழ்த்த விரும்பினேன்… சாவுக்கு அஞ்சவில்லை’: துணை விமானி ‘பகீர்’!

பெரும்பாலும் இஸ்ரேலியர்களான 170-க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானத்தை, கப்டன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்