தனது மகனின் பிறந்தநாளில் போதைப்பொருள் விருந்து வைத்த ஆசிரியையும், மாணவர்களும் வெள்ளவத்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளவத்தை, பாமன்கடை பகுதியில் உள்ள இரண்டு மாடி வீட்டில் இந்த விருந்துபசாரம் நடந்தது.
சர்வதேச பாடசாலையொன்றின் ஆசிரியையே, தனது மகனின் பிறந்தநாளை இப்படி போதையாக கொண்டாடியுள்ளார்.
பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டை முற்றுகையிட்டு சோதனை நடத்திய போது, 10 கிராம ஐஸ், 2000 மில்லி கிராம் கேரள கஞ்சா என்பன மீட்கப்பட்டன.
41 வயதான ஆசிரியை, மற்றொரு பெண், 18 வயதிற்கும் 26 வயதிற்கும் உட்பட்ட 12 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்
சந்தேக நபர்கள் மவுண்ட் லவனியா நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1