ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய அஸ்வின்! கொரோனாவுடன் போராடும் குடும்பத்தினர்..

Date:

ஐபிஎல் டி20 தொடரில் இருந்து டெல்லி கேபிடல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர் தற்போது நடக்கிறது. இந்தாண்டு தொடரில் மொத்தமா க 5 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் விக்கெட் வீழ்த்தவில்லை. டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பார்மில் அஸ்வின் இருந்தபோதிலும், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறினார் அஸ்வின்.

இதற்கிடையில் இந்தியாவில் கொரோனா வைரஸி இரண்டாவது அலை தற்போது வேகமாக பரவி வருகிறது. இதில் சென்னையில் நடந்த லீக் போட்டிகள் அடுத்ததாக டெல்லி மற்றும் அகமதாபாத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கவுள்ளன. சென்னையி தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் போன்ற கடினமான நேரத்தில் குடும்பத்தினருடன் இருக்கவேண்டிய அவசியம் உள்ள நிலையில் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிவிட்டரில் அஸ்வின் வெளியிட்டுள்ள பதிவில் “ஐபிஎல் தொடரில் இருந்து நாளை முதல் நான் விலகிக் கொள்கிறேன். கொரோனா வைரஸுக்கு எதிராக எனது குடும்பத்தார் போராடி வரும் நிலையில் அவர்களுடன் இருப்பது அவசியம். எல்லாம் சரியான சென்றால் மீண்டும் அணியில் இணைவேன் என எதிர்பார்க்கிறேன். நன்றி டெல்லி கேபிடல்ஸ்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரிலிருந்து பாதியிலேயே விலகும் நான்காவது வீரர் அஸ்வின். ஏற்கெனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் விலகினார். இங்கிலாந்தைச் சேர்ந்த லிவிங்ஸ்டோன், ஆஸ்திரேலியாவின் ஆன்ட்ரூ டை ஆகியோர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர் அன்டன் அனஸ்டீன் கடமையேற்பு

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர்...

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்