19 வயதான கர்ப்பிணிப் பெண்ணொருவர் எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த இளம்பெண், கடந்த 17ஆம் திகதி எரிகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
அவரது மரணத்தில் சந்தேகமிருந்ததால், கணவனை கைது செய்யுமாறு திடீர் மரணவிசாரணை அதிகாரி தெரிவித்தார். இதனடிப்படையில் கணவன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1