மே தின கூட்டத்தை நடத்துவோம்; முள்ளிவாய்க்கால் அஞ்சலிக்கும் அனுமதிக்க வேண்டும்: ஜே.வி.பி!

Date:

திட்டமிட்டபடி மக்கள் விடுதலை முன்னணியின் மேதினக் கூட்டம் இடம்பெறும் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரம் தெரிவித்தார்.

இன்று மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இம்முறை மே தினத்தை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். எனினும் இந்த அரசாங்கமானது எமது மே தின நிகழ்வுகளை தடை செய்வதற்கு பல்வேறு விதத்திலும் முயன்று வருகின்றது.

மக்கள் விடுதலை முன்னணியினர் ஆகிய நாங்கள் எந்த தடை வந்தாலும் கொழும்பிலும் ஏனைய மாவட்டங்களிலும் எமது மே தினத்தை நினைவு கூறுவோம் என உறுதி கொண்டு உள்ளோம்.

மே மாதம் என்பது ஒரு விசேட ஒரு மாதமாகும். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் மேதின நிகழ்வு இடம்பெறும் மாதமாகும்.

முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான இறந்த உயிர்களை மக்கள் நினைவு கூரும் நாள்.

எனினும் இந்த அரசாங்கமானது தற்போது கொரோனா என்ற ஒரு மாயையை உருவாக்கி மே தினம் மற்றும் முள்ளிவாய்க்கால் தினத்தை தடுப்பதற்காகவே இந்த கொரோனா என்ற குழப்பத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்கிறது.

அதனால் மக்கள் விடுதலை முன்னணி என்ற வகையிலே விஷேடமாக முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்கள் என்பவர்கள் வேற நாட்டு மக்கள் இல்லை. எதிரி நாட்டு பிள்ளைகள் இல்லை. எங்களது உள்ளங்கள். எங்களது சகோதரர்கள். அதனால் அந்தச் சகோதரர்களை நினைவு கூர்வதற்கு அந்த மக்களுக்கு உரிமை இருக்கின்றது. அந்த உரிமையை அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்து வருகின்றது. அதனால் இதற்கு எங்களுடைய வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஏனென்றால் அதாவது முள்ளிவாய்க்காலில் இறந்தவர்கள் அவர்கள் எதற்காகப் போராடினார்கள் என்பதல்ல பிரச்சினை. எதற்காக போராடினாலும் கூட அவர்கள் எமதுநாட்டு மக்கள். வேறும் யாரும் இல்லை. மக்கள் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கு யாரும் தடுக்க முடியாது. எனவே மக்களின் உரிமையை இந்த அரசாங்கம் நிலைநிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தவர் விரும்பும் வரை அமெரிக்காவில் தங்கலாம்: ட்ரம்ப்

கடந்த வாரம் பிரேசிலின் ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரி தற்போதைய ஜனாதிபதி லூயிஸ்...

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 இளைஞர்கள் பலி

யாழ்ப்பாணம், அளவெட்டியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். ஒருவர்...

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்

யாழ்ப்பாணத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இளைஞன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்