கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு துணை நிற்போம் என அமெரிக்கா தெரிவிப்பு!

Date:

வாஷிங்டன்:

இந்தியா கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது. உலக அளவில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் 26 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.

இதனால், நாட்டில் உள்ள முக்கிய மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல நகரங்களில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து ஆக்சிஜன் டேங்கர்களை அனுப்பி வருகிறது. கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வரும் இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக இங்கிலாந்து, பிரான்சு உள்ளிட்ட நாடுகள் அறிவித்தன.

அந்த வகையில், அமெரிக்க வெளியுறவுத்துறையும் இந்தியாவுக்கு துணை நிற்போம் எனத் தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை இதுபற்றி கூறுகையில்,கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு துணை நிற்போம். இந்தியர்களுக்கு உதவ அனைத்து வகையிலும் தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பௌத்த பிக்குகளின் ஆடை விவகாரத்தில் பணிந்தது அனுர அரசு!

சிறையில் உள்ள பௌத்த பிக்குகள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ...

கிரியெல்லவின் கருத்திற்கு மனோ எதிர்ப்பு

கண்டியில் மகாநாயக்க தேரரைச் சந்தித்தபோது, ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் சிரேஷ்ட...

23,006 ஆசிரிய23,006 ஆசிரியர் வெற்றிடங்கள்: முதற்கட்ட நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்ற பட்டதாரிகளின் பட்டியல் வெளியீடு!

இலங்கை ஆசிரியர் சேவையில் நிலவும் 23,006 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பின் முதற்கட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்