விஷாலுக்கு கடைசி ஹிட்டான இரும்புத்திரை படத்தின் இயக்குனரான PS மித்ரன் அவர்களின் அடுத்த படம் என்ன என்று ஆவலோடு காத்துக் கொண்டிருந்த வேளையில் வெளிவந்தது தான் ஹீரோ திரைப்படம். படம் ஓரளவுக்கு சுமார் என்றாலும் படம் சரியாக ஓடவில்லை.
அதன் பின் PS மித்ரன் விஷாலை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்க இருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் அதையெல்லாம் மறுத்துவிட்டு நடிகர் கார்த்தியை வைத்து தற்போது “சர்தார்” எனும் படத்தை இயக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இதில் சற்றே வயதான தோற்றத்தில் இருக்கும் கார்த்தியை பார்த்தவுடன் இந்த படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். மித்ரனின் முந்தைய படங்களை போலவே இப்படமும் ஆக்ஷன் த்ரில்லராக உருவாக உள்ளதாம்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1