அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருந்த சோனு சூட் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாக தன்னுடைய வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அண்மையில் நடிகர் சோனு சூட் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த பேரிடர் காலத்தில் மக்களுக்கு துணையாக களத்தில் நின்ற சோனு சூட் நோயிலிருந்து மீண்டு வரவேண்டும் என்று பலரும் பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில் கொரோனாவில் இருந்து தான் மீன்டுள்ளதாக தன்னடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் சோனு சூட்.
அனுஷ்கா நடிப்பில் வெளியான ‘அருந்ததி’ திரைப்படத்தில் கொடூரமான வில்லனாக நடித்து பயமுறுத்திய சோனு சூட், இந்த கொரோனா பேரிடர் காலத்தில் எளிய மக்களின் பக்கம் நின்று ஹீரோவாக ஜொலித்து வருகிறார் நடிகர் சோனு சூட். கொரோனாவின் முதல் அலையில் வாழ்வாதாரத்திற்காக சொந்த ஊரை, மாநிலத்தை விட்டு புலம் பெயர்ந்து வேலை பார்த்த பலர், கொரோனா பேரிடரின் போது, சொந்த மாநிலத்திற்கு செல்ல முடியாமல் பலவித அவதிகளுக்கு உள்ளனார்கள்.
அப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து உதவி கேட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் சொந்த கிராமங்களுக்கு செல்ல தன்னால் இயன்ற உதவிகளை செய்தார் சோனு சூட். இதனால் பலரின் பாராட்டுக்களும், கொண்டாட்டத்திற்கு ஆளானார் சோனு. இந்நிலையில் தற்போது வேகமேடுத்துள்ள கொரோனா இரண்டாம் அலையிலும் கூட, மக்களுக்கு தேவையான ஆக்சிஜன் வசதி, படுக்கை வசதி உள்ளிட்டவைகளை செய்து கொடுத்து வருகிறார் சோனு சூட்.
இந்நிலையில் அண்மையில் இந்த கொரோனாவின் கோர தாண்டவத்திற்கு சோனு சூட்டும் ஆளானார். கொரோனா பாதித்த போது கூட, தன்னால் மக்களுக்கு உதவ முடியவில்லை என்றே வருத்தப்பட்டார். இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “காலையிலிருந்து என்னால் என் தொலைப்பேசியை கீழே வைக்க முடியவில்லை. இந்தியா முழுவதிலுமிருந்து மருத்துவமனை படுக்கைகள், மருந்துகள், ஊசிகள் என ஆயிரக்கணக்கான அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இன்னும் அதில் பலருக்கு என்னால் உதவ முடியவில்லை. நிர்கதியாக உணர்கிறேன். இந்தச் சூழல் அச்சத்தை தருகிறது. தயவு செய்து வீட்டில் இருங்கள். முகக் கவசம் அணியுங்கள். தொற்றிலிருந்து உங்களைக் காத்து கொள்ளுங்கள் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வீட்டில் தன்னை தனிமைபடுத்தி மருத்துவ சிசிச்சையில் இருந்த சோனு சூட், வலைத்தளங்களின் வாயிலாக தன்னிடம் உதவி கேட்ட நபர்களுக்கு தொடர்ச்சியாக உதவி செய்து வந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரிசோதனை செய்த சோனு சூட்டிற்கு, நெகட்டிவ் ரிசல்ட் வந்திருக்கிறது. இதனை மகிழ்ச்சியுடன் தன்னுடைய வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சோனு சூட்.