26.9 C
Jaffna
January 28, 2025
Pagetamil
இலங்கை

துறைமுக நகர சட்டமூல விசாரணை நிறைவு!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான விசாரணை நிறைவு செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, இதன் தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

குறித்த மனுக்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இன்று (23) ஐந்தாவது நாளாக உயர்நீதிமன்றில இடம்பெற்றது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனெக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, முர்து பெர்ணான்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் அடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கேபண்டார, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க, இலஙகை சட்டத்தரணிகள் சங்கம், மாற்று கொள்கை கேந்திரம், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, தகவல் தொழிநுட்ப தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவரான பொறியியலாளர் ஜீ.கபில ரேணுக பெரேரா உள்ளிட்ட தரப்பினர்களால் சுமார் 20 மனுக்கள் இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பண்டத்தரிப்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா

east tamil

Update – மாவை. சேனாதிராஜா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

east tamil

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகவுள்ள இலங்கை பொருளாதார உச்சி மாநாடு

east tamil

யாழ். பல்கலை பிரச்சினைக்கு விரைவு நடவடிக்கை – அரசு அறிவிப்பு

east tamil

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முடிவுகளை அரசாங்கம் மேற்கொள்ளும் – அநுர

east tamil

Leave a Comment