இந்த வார ராசி பலன்கள்! (23.4.2021- 29.4.2021)

Date:

செவ்வாய், சுக்கிரன், புதன் நன்மை செய்வர். கிருஷ்ணர் வழிபாடு முன்னேற்றம் தரும்.
அசுவினி: சுபச்செலவுகள் ஏற்படும். கவனச்சிதறல் ஏற்பட அனுமதிக்காதீர்கள். பணியாளர்களுக்கு உழைப்பால் ஆதாயம் உண்டு. பண வரவு ஓரளவு திருப்தி தரும். புதிய இனங்களில் முதலீடு செய்வதை தவிர்க்கவும்.
பரணி: உங்களின் முயற்சி லாபம் தரும். பிரச்னை வரும்போது விட்டுகொடுத்துப் போவது நல்லது. குடும்பத்தில் கூடுதல் செலவுகள் ஏற்படும். மனதில் திருப்தி உண்டாகும். திட்டமிட்டு பணிகளை முடிப்பீர்கள்.
கார்த்திகை 1: வாழ்க்கைத்துணையின் நிதி நிலை தேறும். நட்புக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உறவினரின் செயல்கள் மகிழ்ச்சி தரும். உடல்நலம் பாதிக்கப்பட்டால் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.
சந்திராஷ்டமம்: 28.4.2021 மதியம் 2:28 மணி – 29.4.2021 நாள் முழுவதும்

புதன், சந்திரனால் அனுகூல நற்பலன்கள் உண்டு. மீனாட்சி வழிபாடு சகல நன்மை தரும்.

கார்த்திகை 2,3,4: சக பணியாளர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். கூடுதல் நன்மைகளை காண்பீர்கள். மனதில் மகிழ்ச்சி நிலவும். வாகன சேர்க்கை ஏற்படும். பெண்கள் வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள்.
ரோகிணி: புதிய முதலீடுகளை ஆராய்ந்து செய்யவும். பணியாளர்கள் அலட்சியமின்றிச் செயல்படுங்கள். உங்களின் முயற்சி காரணமாகப் பொருளாதார நிலை உயரும். தடைப்பட்ட விஷயங்கள் இந்த வாரம் நடைபெறும்.
மிருகசீரிடம் 1,2: பணியாளர்கள் பெருமிதம் அடைவீர்கள். குடும்பத்தில் இணக்கம் ஏற்பட உங்கள் ஈகோ தடையாக இருக்கும். நண்பர்களுடனான சண்டைகள் உங்களின் முயற்சியால் தீரும். எதிர்கால நலனுக்காக திட்டமிடுவீர்கள்.

குரு, சூரியன், புதன், சுக்கிரனால் அதிர்ஷ்டம் உண்டு. தன்வந்திரி வழிபாடு தொழிலில் உயர்வு தரும்.
மிருகசீரிடம் 3,4: ஆன்மிகப் பெரியவர்களிடம் ஆசி பெறுவீர்கள். பொறுப்பான எண்ணங்கள் மனதை ஆட்கொள்ளும். பணியில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். வாடிக்கையாளர்களை அனுசரித்து சென்றால் லாபத்தை பெறலாம்.
திருவாதிரை: புதிய தொழில் முயற்சியில் ஈடுபட்டுள்ளோர் சிறு தடைக்குப்பின் முன்னேற்றம் காண்பர். அரசாங்க வகையில் ஆதாயம் கிடைக்கும். வேலையில் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழ தாமதமாகும். பொறுமை தேவை.
புனர்பூசம் 1,2,3: ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கொள்வீர்கள். பிள்ளைகளின் திருமணம் உறுதியாகும். வெளிநாட்டுத் தொடர்பால் பயன் உண்டு. உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களை சற்றுக் கண்காணிக்க வேண்டியிருக்கும்.

சூரியன், புதன், ராகு அனுகூல அமைப்பில் உள்ளனர். முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.
புனர்பூசம் 4: முயற்சிகளில் இருந்து வந்த காலதாமதம் நீங்கும். பணியாளர்கள் பேச்சிலும் செயலிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை கூடும். சிறு சறுக்கலுக்கு பின் முன்னேற்றம் இருக்கும்.
பூசம்: பிறரை அனுசரித்துச் சென்று அமைதி காண்பீர்கள். பணியிடத்தில் வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். சாதுர்யமாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள். வீடு மாறும் முயற்சி சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு.
ஆயில்யம்: வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு கூடும். தொழிலில் நேரம் செலவு செய்ய முடியாமல் தவிப்பீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

குரு, செவ்வாய், புதன், சுக்கிரன் நன்மைகளை வாரி வழங்குவர். விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.
மகம்: இந்த வாரம் வெற்றி உங்களைத் தேடி வரும். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளிடம் இருந்து சந்தோஷ செய்தி வரும். கிடைக்கும் வாய்ப்புகளைப் சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள்.
பூரம்: பணியிடத்தில் கவனச் சிதறலைத் தவிர்க்கவும். கவனமான தொழில் அணுகுமுறையால் ஆதாயம் உண்டு. பேச்சில் எச்சரிக்கை தேவை. உடல்நிலையில் சிறு பிரச்னைகள் வந்தால் அலட்சியம் செய்ய வேண்டாம்.
உத்திரம் 1: அலுவலகச் செயல்பாடுகளில் நிதானம் தேவை. எதிர்பாராத அதிர்ஷ்டங்களை எதிர்பார்க்கலாம். கொடுக்கல், வாங்கலைத் தவிர்க்க வேண்டும். விருந்து, விசேஷம் போன்ற மகிழ்வுகள் கைக்கெட்டாமல் போகக்கூடும்.

கேது, புதன், சந்திரன் அதிர்ஷ்டத்தை வழங்குவர். நரசிம்மர் வழிபாடு பயம் போக்கும்.
உத்திரம் 2,3,4: பணியாளர்களுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் ஏற்படும். வீட்டுப் பராமரிப்பு செலவு கூடும். சுபநிகழ்ச்சி பற்றிய பேச்சுகளில் சிறு சிறு தடைகள் ஏற்படலாம். நண்பர்களுக்கு அதிகம் இரக்கப்பட வேண்டாம்.
அஸ்தம்: உங்களின் முயற்சிகள் சற்று காலதாமதமாக வாய்ப்புண்டு. எனவே பொறுமையைக் கடைப்பிடிப்பது நன்மை தரும். மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பெண்களுக்கு வேலை சற்று அதிகமாக இருக்கும்.
சித்திரை 1,2: உங்களால் குடும்பத்தினருக்கு நன்மைகள் விளையும். பதவி உயர்வை எதிர்பார்த்தவர்களுக்கு நற்செய்தி உண்டு. முன்னேற்றமான சூழ்நிலையை காண்பீர்கள். மாணவர்கள் புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் கொள்வர்.

புதன், சுக்கிரன், சந்திரனால் நற்பலன் உண்டு. துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.
சித்திரை 3,4: வியாபாரிகள் இந்த வாரம் முன்னேற்றம் காண்பர். சிலருக்குப் புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாடு செல்லும் வாய்ப்பு பற்றிய நற்செய்தி வரும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை நடத்துவர்.
சுவாதி: மனதிற்கு பிடித்த சிந்தனைகளோடு செல்லும் அருமையான வாரமாக அமையும். சொத்து, வாகனம் வாங்கும் முயற்சிகளில் பெரிய முன்னேற்றம் இருக்காது. பெண்களுக்கு தந்தையின் அன்பும், ஆதரவும் உண்டு.
விசாகம் 1,2,3: வேலை வாய்ப்பு சற்று தாமதமாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு வழிகாட்டுபவரின் ஆதரவை பெறுவீர்கள். மனதிற்கு பிடித்தவருக்கு உதவி செய்து பாராட்டு வாங்குவீர்கள். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்கவும்.

குரு, புதன், சந்திரன் கூடுதல் நன்மைகளை வழங்குவர். குரு வழிபாடு சுபவாழ்வு தரும்.
விசாகம் 4: சாதுர்யமாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். முயற்சிக்கான பலன் எதிர்பார்த்ததை விட நன்றாக இருக்கும். அலுவலக விஷயத்தில் கோபம் அதிகமாக வராமல் கவனமாக இருங்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
அனுஷம்: திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. முயற்சிகளில் சிறு சிறு தாமதங்கள் ஏற்படும். உடல்நலம் நன்றாக இருக்கும். பணியாளர்கள் நன்கு உழைத்து நற்பெயர் வாங்குவீர்கள். எதிரிகளை நண்பர்களாக்கி கொள்வீர்கள்.
கேட்டை: கணவருக்கு நற்செய்தி வரும். பெரிய திட்டங்களுக்கு சிறிய நிதி உதவிகள் கிடைக்கும். நிம்மதி மீளும். கவனத்துடன் செய்யும் விஷயங்கள் சாதகமான பலன் தரும். சமூகத்தில் முக்கிய நபர் என்று பெயர் எடுப்பீர்கள்.
சூரியன், புதன், சுக்கிரன் நன்மைகளை அள்ளித்தருவர். அனுமன் வழிபாடு வெற்றி தரும்.
மூலம்: பணியாளர்கள் தங்களது வேலைகளை முனைந்து நிறைவேற்றுவர். சவாலில் இறங்கியிருப்பவர்கள் வெற்றி பெறுவர். அனுபவசாலிகளின் ஆலோசனையை ஏற்பது நல்லது. பொதுநலப் பணியில் ஈடுபட்டு மகிழ்ச்சி காண்பீர்கள்.
பூராடம்: வீண் அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. முயற்சியில் சிறிதளவு நன்மை உண்டாகும். பிறருக்கு உதவிகள் செய்ய முனைவீர்கள். பழைய நண்பர்களை மீண்டும் சந்திக்க நேரலாம். மன தைரியம் அதிகரிக்கும்
உத்திராடம் 1: விரைந்து முடிய வேண்டிய வேலைகள் தாமதப்படும். செலவுகளும், நன்மைகளும் கூடும். முக்கியமான விஷயங்களை முடிவெடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். உயரதிகாரியின் ஆலோசனையை பெறுவீர்கள்.
செவ்வாய், கேது, குரு அதிர்ஷ்ட அமைப்பில் உள்ளனர். ராமர் வழிபாடு நிம்மதி தரும்.
உத்திராடம் 2,3,4: நிர்வாகத்தின் வழிகாட்டுதலை எளிதாக புரிந்து செயல்படுவீர்கள். வியாபாரிகள் அதிக முதலீட்டைத் தவிர்க்கலாம். பங்குச் சந்தையில் சிறிதளவு லாபம் வரும். உறவுகளில் இருந்த மனக்கசப்புகள் மாறும்.
திருவோணம்: பணியில் கவனம் சிதறக்கூடும். கணவர் நற்செய்தி ஒன்றை கொண்டு வருவார். மன தைரியம் கூடும். கலைஞர்கள் சாதனை புரிவீர்கள். வெளிநாட்டில் உள்ள உறவினருடன் உரையாடுவது மன நிறைவு அளிக்கும்.
அவிட்டம் 1,2: ஆன்மிக பயணங்கள் தள்ளிப்போகக்கூடும். பாராட்டு பெறுவீர்கள். பணி சம்பந்தப்பட்ட விஷயத்தில் பெரிய திட்டங்களை தீட்டுவீர்கள். தைரியமாக எதையும் செய்ய தோன்றும். குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம்: 23.4.2021 காலை 6:00 – 24.4.2021 காலை 8:46 மணி
செவ்வாய், கேது நன்மை செய்யும் அமைப்பில் உள்ளனர். சனீஸ்வரர் வழிபாடு சிரமம் தீர்க்கும்.
அவிட்டம் 3,4: நேர்மையற்ற செயல் எதுவும் செய்ய வேண்டாம். வேண்டுதல்கள் நிறைவேறும். குடும்பத்தினருக்கு தெரியாமல் ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடாதீர்கள். தெய்வ வழிபாடு மன அமைதி தரும்.
சதயம்: சக பணியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். பெண்கள் வீண் பழி சுமக்காதபடி கவனமாக இருங்கள். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். எதிரிகள் மனம் மாறுவார்கள்.
பூரட்டாதி 1,2,3: பேச்சு, செயலில் மிகுந்த கவனம் தேவை. என்றைக்கோ செய்த தவறுகள் இன்று பிரச்னை தரக்கூடும். நண்பர்களின் துாண்டுதலால் பாவச்செயல்களை செய்ய வேண்டாம். பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம்: 24.4.2021 காலை 8:47 – 26.4.2021 மதியம் 12:01 மணி
சனி, ராகு நலன்களை அள்ளித்தருவர். பைரவர் வழிபாடு பல நன்மைகள் தரும்.
பூரட்டாதி 4: கட்டடங்கள் மூலம் வருமானம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் முழு கவனத்தையும் செலுத்துங்கள். பணியில் தாமதம் உண்டானால் கோபப்பட வேண்டாம். புதிய விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள்.
உத்திரட்டாதி: பொழுதுபோக்கில் கவனம் செலுத்துவதால் பொறுப்பை கைவிடக்கூடும். கடைசி நிமிடம் வரை எதையும் தள்ளிப்போட வேண்டாம். கலைஞர்கள் உரிய கவனம் பெறுவர். தாழ்வு மனப்பான்மை நீங்கும்.
ரேவதி: திட்டமிட்ட விஷயங்கள் சற்று தாமதப்படலாம். பணியில் முழுமுனைப்புடன் செயல்படுங்கள். யாரை நம்பியும் ரகசியங்களை வெளியிட வேண்டாம். வெற்றிகரமான செயல்கள் செய்தாலும் பாராட்டு கிடைக்காது.
சந்திராஷ்டமம்: 26.4.2021 மதியம் 12:02 – 28.4.2021 மதியம் 2:27 மணி
spot_imgspot_img

More like this
Related

திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது!

திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் ஒருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில்...

பெல்ஜியம் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்சனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

பிரபஞ்சத்தில் நிகழும் தீவிரமான நிகழ்வுகளிலிருந்து உருவாகும் உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோ...

சுரேஷ் சாலே மீண்டும் சிஐடியின் காவலில்!

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரச புலனாய்வு சேவையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்