கல்முனை விடயத்தில் ஹரிஸ் எம்.பி கவனமாக இருக்க வேண்டும்: ஞா.சிறிநேசன்!

Date:

பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆட்சி அமைத்தன் பின்னர் தமிழ் பேசும் மக்களை நோக்கி தாக்குகின்ற அல்லது சீண்டுகின்ற செயற்பாடுகள் நடைபெறுகிறது. தமிழ் முஸ்லிம் சிறுபான்மையினரை மோத விடும் செயற்பாடாகவே கல்முனையை அரசு கையிலெடுத்துள்ளது. இதில் ஹரிஸ் எம்.பி கவனமாக செயற்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி ஞா.சிறிநேசன்.

இன்று (23) மட்டக்களப்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

நவகாலனித்துவத்தின் அடிப்படையில் கடன்களை கொடுத்து நாடுகளை கட்டுப்படுத்தும் ஒரு அடிமைத்துவ செயற்பாடுதான் துறைமுக நகர விடயம் என்றும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆட்சி அமைத்தன் பின்னர் தமிழ் பேசும் மக்களை நோக்கி தாக்குகின்ற அல்லது சீண்டுகின்ற செயற்பாடுகள் நடைபெறுகிறது.
அந்த வகையில் நேற்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் உபசெயலகமாக அறிவிக்கப்பட்டுள்ளது .

உப செயலகமாக காணப்பட்ட கல்முனையை, முழுமையாக செயலாகமாக மாற்றவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு அதற்குரிய பிரயத்தனங்கள் நடைபெற்றாலும், தற்போது கிடைத்துள்ள செய்தி பிரதமர் மகிந்த அவர்கள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 07பேரை அழைத்து பேசியதன் பின்னர் தற்போது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு இருந்த அதிகாரத்தையும் கூட குறைத்து அதை தரக்குறைவான நிலைக்கு கொண்டுவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது கண்டிக்கத்தக்கவிடயம். தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக பேசும்போது, சாதாரண நிர்வாக அதிகாரத்தை கூட கொடுக்காமல், முஸ்லிம் அரசியலாவாதிகளையும் தமிழ் அரசியல்வாதிகளையும் அல்லது முஸ்லிம் தமிழ் சமூகத்தை மோத விடுகின்ற செயற்பாட்டிற்காக இதை செய்கின்றனர்.

இந்த இடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் அவர்கள் மிகவும் கவனமாக நடக்கவேண்டும். ஏனெனில், கட்டாயம் செய்ய வேண்டிய, சாதாரணமான நிர்வாக விடயத்திற்கும் அவர்கள் பேரம் பேசி, 20வது திருத்தத்திற்கு 7 பேர் வரை கையை உயர்த்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டுமென கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அதற்கு எதிராக செயற்பட்டுள்ளனர்.

தமிழ் முஸ்லிம் தரப்புக்களை மோத விடுவதற்கு கல்முனை விடயத்தை கையாள்கிறார்கள். முஸ்லிம் தலைமைகள் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

கல்முனையை தரமுயர்த்தும் விடயத்தில் தமிழ் பேசும் இரண்டு தரப்பும் இணைந்து செயற்பட வேண்டும்.

தம்பர அமில தேரர் என்ற தேரர் ஒருவர் சொல்லியிருக்கிறார், விடுதலைப்புலிகள் தமிமீழத்தை பெற்றிருந்தாலும் பரவாயில்லை , அதை அனுமதித்திருக்கலாம். அதை விட மோசமான விடயம் இந்த துறைமுக நகர உருவாக்கம் என  சொல்லியிருக்கின்றார்.

உள்ளூர் மட்டத்தில் அதிகாரத்தை பகிர்ந்து சகோதர மக்களின் பிரச்சனையை தீர்ப்பதை விடுத்து, முள்ளைப் பிடுங்கிவிட்டு ஆப்படித்ததைபோல்தான் வெளிநாட்டு ஆளுமை செலுத்தக்கூடிய துறைமுக நகரத்தை உருவாக்கியிருப்பதாக நான்மட்டும் கூறவில்லை, விஜயதாச, அனுரகுமார திசாநாயக்க, பௌத்த பிக்குகள் சொல்லியிருக்கிறார்கள்.

துறைமுக நகரமென்பது, கடன் பொறிக்குள் இலங்கையை தள்ளிவிடுவது. பிறக்கின்ற ஒவ்வொரு பிள்ளையும் 7 இலட்சம் ரூபா கடனுடன் பிறப்பதாக பௌத்த பிக்குவொருவர் சொல்லியிருந்தார்.

நவகாலனித்துவத்தின் அடிப்படையில் கடன்களை கொடுத்து நாடுகளை கட்டுப்படுத்தும் ஒரு அடிமைத்துவ செயற்பாடுதான் துறைமுக நகர விடயம்.

சீனாவின் பிடியில் இருந்து விலகிக்கொள்ள முடியாமல் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவை முழுமையாக எதிரியாக ஆக்கும் செயற்பாடு. மேலைத்தேய நாடுகள் எல்லாவற்றையும் எதிரியாக்கும் செயற்பாடு என்றார்.

spot_imgspot_img

More like this
Related

விபத்தில் பாடசாலை மாணவன் பலி

நேற்று (7) நோர்டன் பிரிட்ஜ் - ஹட்டன் பிரதான வீதியில் உள்ள...

தென்னக்கோன் உள்ளிட்ட 9 பொலிஸ்காரர்களிற்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக,...

ஊரான் வீட்டு பணத்தில் ஸ்வீட் சாப்பிட்ட மஹிந்த குடும்பம்: நீதிமன்றத்தில் அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்கள்!

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் மகளிர் பிரிவில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிராந்தி ராஜபக்ஷவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்