27.6 C
Jaffna
January 28, 2025
Pagetamil
லைவ் ஸ்டைல்

வெறுங்காலோடு நடப்பதால் ஏற்படும் நன்மைகள்!!!!

40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மனித இனம், பல்வேறு படிநிலைகளை கடந்து, இன்று நவநாகரீக நிலையை அடைந்துள்ளான். இன்றைய நிலையில், நாம் அனைவரும் ஷூக்களை அணிய பழகி உள்ளோம். நாம் தற்போது காலணி, ஷூ அணிவதன் பின்னணியில் உள்ள அறிவியல் காரணங்களும், அதுதொடர்பான பல்வேறு ஐடியாக்களும், மக்களின் தொடர் சிந்தனைகளை தொடர்ந்து செயலாற்றி வருகின்றன.

நாம் ஷூக்கள் முதன்முதலாக அணிந்த காலத்தில், அப்போது நம்மிடையே சில சமூக மாற்றங்கள் ஏற்பட துவங்கின.

தொழிலாளர்களிடையே பல்வேறு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன. வேட்டையாடுவதை முக்கிய தொழிலாக கொண்டிருந்த மக்கள், அதிலிருந்து பிரிந்து விவசாயம் செய்ய துவங்கினர். தையல் ஊசிகள் போன்ற துல்லியமான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த நேரத்தில் நம் கால்களுக்கு பாதுகாப்பு அரணாக காலணிகள் விளங்குவது தெரியவந்தது. இந்த காலணிகள், நம் கால்களை மூடுவதை கருத்தில் கொள்வதற்கான நேரமும், வளமும் நம்மிடம் இருப்பதை காட்டிலும் மிக அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது.

  • ​காலணிகள் அணிவதன் அவசியம்

உங்கள் கால் பாதத்தில் காணப்படும் வெப்பநிலையே, உங்களது மொத்த உடலின் வெப்பநிலையை பராமரிக்கும் காரணி என்ற உண்மை புரிந்தது. இதுவே, 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, நமக்கு அடுத்த வேளை உணவு எங்கிருந்து வரும் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. அதேபோல், நாம் எல்லா வசதியுடன் வாழ என்னென்ன தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை.இன்றைய நவீன யுகத்தில், காலணிகளை அணிவதன் அவசியத்தை நாம் அறிந்து இருக்கிறோம்.

தளங்கள் அனைத்தும் அசுத்தமாக உள்ளன. காணும் இடங்களில் எல்லாம் குப்பைகள் நிறைந்துள்ளன. இந்த உலகின் பெரும்பாலான பகுதிகள், நகரமயமாக்கலின் விளைவாக, பெரும் மாற்றங்களை அடைந்துள்ளன.

  • ​பாதங்களுக்கும் பூமிக்குமான தொடர்பு

நமது பாதங்களுக்கும், பூமிக்கும் இடையே உள்ள தொடர்பை இழந்து வருகிறோம். மனிதர்கள் கண்டுபிடித்துள்ள கண்டுபிடிப்புகளில்,காலணிகள், நம்மை உயிரியல் அடிப்படையில்,நம்மை மாற்றிவிட்டது என்றே சொல்ல

வேண்டும். புதிய தகவமைப்புகளுக்கு ஏற்ற வகையில், நாம் நம்மை மாற்றி அமைத்துக் கொண்டு விட்டோம் என்றே சொல்ல வேண்டும்.

காலணிகள் கண்டுபிடித்து அதை பயன்படுத்தி வரும் நமக்கு கிடைத்துள்ள முக்கிய நன்மைகள் குறித்து இனி விரிவாக காண்போம். இந்த நன்மைகள், நமக்கு சுகாதார ரீதியிலும் மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளன என்று சொன்னால், அது மிகையாகாது.

  • ​உடல் அமைப்பு

வெறுங்காலோடு நாம் நடந்து செல்லும் போது, நமது உடல், இயற்கையான நடக்கும் நிலைக்கு வருகிறது. ஆனால், இன்றைய நிலையில், நாம் அணியும் காலணிகள், பல்வேறு புதிய தொழில்நுட்பங்களின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன. ஹீல்ஸ் வகை காலணிகள், கால்களுக்கு மெத்தை போன்றதொரு சுகத்தை அளிப்பதோடு மட்டுல்லாது, அதன் ஒவ்வொரு நிலையிலும், ஒவ்வொரு தனிப்பட்ட அழுத்தத்தை நம்முள் ஏற்படுத்துகின்றன.

நம்மால், நமது நடையை ஒருபோதும் ஒழுங்குபடுத்த முடியாது. முதுகெலும்புகளை நேராக வைத்திருக்க உள்ள தசைக்குழுக்கள், நமது நடையை வலுவானதாக வைத்துக்கொள்ளும் உடல் உறுப்புகளை நாம் எப்போதும் ஒழுங்காக பயன்படுத்துவது இல்லை. இதனால், அவைகள் முன்பு இருந்ததை போன்று தற்போது வலுவாக இருப்பது இல்லை.

கால்களில் உள்ள சிறிய தசைகள், நீங்கள் நடக்கும்போது, உங்கள் கால்களுக்கும், தரைக்கும் இடையே ஒரு தடைக்கற்களாக இருக்கும்போது, அவை கால்களில் உள்ள பெரிய தசைகளுக்கு அவைகள் அனுப்பும் தகவல்களையும், அவைகள் முதுகெலும்புகளுக்கு அனுப்பும் செய்திகளையும் அது நீர்த்துப்போக செய்கிறது. நாம் வெறுங்காலோடு நடக்கும்போது, அது நமது உடலின் இயற்கையான உடல் அமைப்பை பேணிக்காப்பதோடு, உடலின் சமநிலையை காக்க உதவுகிறது.

  • ​ரிப்ளெக்ஸ் புள்ளிகளை தூண்டுகிறது

தொடுதல் உணர்வு தொடர்பான அறிவியல் மிகவும் சாதாரணமானது ஆகும்.நமது கைகள் மற்றும் கால்களில் உள்ள தொடு உணர்வு புள்ளிகள், நரம்பு மண்டலத்தை தூண்டி அதன் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தி, அதிகப்படியான சக்தி, சிறந்த ரத்த ஓட்டத்திற்கு காரணமாக அமைகிறது. தலைவலிகள், சிறந்த உறக்கம், மன அழுத்த குறைப்பு சிகிச்சைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.நீங்கள் வெறுங்காலோடு நடக்கும்போது, கால்களில் உள்ள தொடு உணர்வு புள்ளிகள் தூண்டப்பட்டு, நாட்பட்ட நோய்களுக்கு எளிதில் தீர்வு கிடைக்க காரணமாக அமைகின்றன.நீங்கள் வெறுங்காலோடு நடக்கும்போது, கால்களில் உள்ள தசைகள் தூண்டப்பட்டு, நீங்கள் உயரமாகவும், நல்ல வலு உடனும் இருக்க உதவுகிறது.

  • ​எதிர்மறை அயனி மின்னழுத்தம்

இந்த பூமியானது, எதிர்மறை அயனி மின்னழுத்தத்தால் நிரம்பியது ஆகும். நமது உடலின் பெரும்பகுதி தண்ணீரால் சூழப்பட்டு உள்ளது. மேலும், அது சிறந்த மின் கடத்தி ஆகவும் செயல்படுகிறது. நாம் வெறுங்காலோடு நடப்பதால், எதிர்மறை அயனி மின்னயழுத்தம் நிரம்பிய இந்த பூமி உடன் நம் காலுக்கு நேரடி தொடர்பு உருவாகிறது. இதன்காரணமாக, நமது உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன.

  • ​நோயெதிர்ப்பு சக்தி

காற்று, பூமி, சூரிய ஒளி உள்ளிட்டவைகளில், எதிர்மறை அயனி மின்னழுத்தம் அதிகம் உள்ளது. இதனுடன் நமது கால்கள் நேரடியாக தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும்போது, அது நமது உடலில் மன அழுத்தம் தொடர்பான அறிகுறிகளை குறைக்கிறது. அறிவாற்றல் செயல்திறனை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. வாழ்வின் அன்றாட நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நுண்ணுயிரிகளுக்கு எதிரான நோய் எதிர்க்கும் சக்தியை அதிகரிக்கிறது.

இன்றைய கார்ப்பரேட் உலகில், வெறுங்காலோடு நடக்கும் நடைமுறையை பலரும் அங்கீகரிப்பது இல்லை. இந்த நகர்ப்புற உலகம் முழுவதும் மனிதர்களால் கட்டமைக்கப்பட்டு உள்ளது. இங்கு வெறுங்காலோடு நடப்பதை நாம் முடிந்தவரை கட்டாயம் ஆக்க வேண்டும்.காலணிகள், நமது பாதங்களை வெதுவெதுப்பாக வைத்திருக்க உதவுகின்றன. மற்றும் ஊடுருவும் வகையிலான காயங்களில் இருந்து நமது பாதங்களை, காலணிகள் பாதுகாக்கின்றன. உங்கள் வீடுகளில் உள்ள கட்டாந்தரை, புல்வெளிகள், கடற்கரைகள் உள்ளிட்ட இடங்களிலாவது காலணிகளை கழற்றி, வெறுங்காலோடு நடக்க பழகுங்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலை ஸ்பெஷல் மாமைற் முறுக்கு

east tamil

மட்டக்களப்பு மரக்கறி கூட்டுக்கறி

east tamil

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

Leave a Comment