கோழிகள் முட்டை இடாததால் பொலிஸில் புகார் அளித்த விவசாயி

Date:

மகாராஷ்டிரா மாநிலம் புணேவைச் சேர்ந்தவர் மகேஷ் குமார். கால்நடை விவசாயியான இவர், தனது பண்ணையில் உள்ள கோழிகள் 6 மாதங்களுக்கு மேலாக முட்டை இடாததால் அதிர்ச்சி அடைந்தார்.

கால்நடை மருத்துவர் கோழிகளை பரிசோதித்த போது அவை உட்கொண்ட தீவனத்தின் காரணமாகவே முட்டை போடும் திறனை இழந்துள்ளதாக கூறியிருக்கிறார்.

இதையடுத்து மகேஷ் குமார், தான் கோழி தீவனம் வாங்கிய நிறுவனத்தின் மீது லோனி கல்போர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தீவனத்தை உண்ட பின்னரே தமது கோழிகள் முட்டை இடவில்லை என்றும், எனவே அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது புகார் மனுவில் அவர் கூறியிருந்தார்.

விசித்திரமான புகாராக இருந்ததால், வழக்கு பதிவு செய்யாத போலீஸார், கால்நடை நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினர். இதில், சில தீவனங்களை உட்கொண்டால் கோழிகள் சிறிது காலத்துக்கு முட்டை போடாது என்றும், பழைய தீவனத்தை கொடுத்தால் பிரச்சினை சரியாகும் என்று கால்நடை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கால்நடை தீவன தயாரிப்பு நிறுவனத்தை போலீஸார் தொடர்பு கொண்டு, இந்தப் புகார் பற்றி கூறியுள்ளனர். அப்போது, புகார் அளித்த விவசாயி மகேஷ் குமாருக்கு உரிய இழப்பீடு வழங்குவதாக அந்நிறுவனம் உறுதி அளித்தது. இதையடுத்து, தனது புகாரை மகேஷ் குமார் திரும்பப் பெற்றார்.

spot_imgspot_img

More like this
Related

உள்ளாடைக்குள் ஹெரோயின் கடத்திய பாத்திமாவுக்கு ஆயுள் தண்டனை

4.90 கிராம் ஹெரோயின் வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனத்...

பத்மே, செவ்வந்தியை அரச பகுப்பாய்வாளரிடம் முற்படுத்த நடவடிக்கை

'கனேமுல்ல சஞ்சீவ'வின் கொலை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, 'கேஹெல்பத்தர பத்N'...

11 கொலைகள் செய்த பாதாள உலக துப்பாக்கிதாரிக்கு தமிழ் பெயரில் போலி அடையாள அட்டை: வசமாக சிக்கிய விதானையார்!

தலங்கம, அகுரேகொடவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு அருகில் சட்டத்தரணி மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்