கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 19 மனுக்கள் இன்று (22) மீண்டும் பரிசீலிக்கப்படும்.
இன்று காலை 9.30 மணிக்கு விசாரணைகள் ஆரம்பிக்கும்.
பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூரிய தலைமையிலான நீதிபதிகள் புவனேக அலுவிஹர, பிரியந்த ஜெயவர்தன, முர்து பெர்னாண்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய நீதிபதிகள் குழு விசாரணையை நடத்தி வருகிறது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், மாற்று கொள்கைகளிற்கான மத்திய நிலையம், ட்ரான்பரன்ஷி இன்ரநஷனல், ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜேவிபி உள்ளிட்ட தரப்புக்களினால் 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மனுக்களில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டார்.
இந்த வரைபின் மூலம் ஒரு ஆணைக்குழுவை நிறுவுவது நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் நாட்டின் இறையாண்மையையும் சவால் செய்கிறது என மனுதாரர் குறிப்பிட்டுள்ளனர்.