தாக்குதலில் கொல்லப்பட்டவர்களிற்கு மன்னாரில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது!

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம் பெற்று இன்று ஏப்ரல் 21 ஆம் திகதி 2 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில், தாக்குதலில் உயிர் நீத்த மக்களுக்காக மன்னாரில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் இன்று புதன் கிழமை (21) காலை 5.45 மணியளவில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் குறித்த திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

இதன் போது ஏப்ரல் 21 இடம் பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிர் நீத்த மக்களுக்காக பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதன் போது பாடசாலை மாணவர்கள் மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதே வேளை மன்னார் மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதோடு, கத்தோலிக்க தேவாலயங்களுக்கு இராணுவம் மற்றும் கடற்படையினர் இணைந்து விசேட பாதூகாப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கண்ணிவெடி வைத்தால் ஈரான் படகுகளை சுட்டுத்தள்ளுவோம்: ட்ரம்ப்

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளைப் பதிக்கும் எந்தவொரு கப்பலையும் அமெரிக்கா அழிக்கும் என்று...

இளம்பெண் குளித்ததை வீடியோ எடுத்தவருக்கு விளக்கமறியல்

அண்டை வீட்டுப் பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தபோது இரகசியமாக காணொளிப் பதிவு...

‘மாற்றம் தேவையில்லை’ என அஜித் கூறினாரா? – மேலாளர் மறுப்பு

வாக்களித்த நடிகர் அஜித்குமார், ‘மாற்றம் தேவையில்லை’ என்று கூறியதாக தகவல் வெளியான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்