பதிவு செய்யப்படாத இணையத்தளங்களிற்கே சிக்கலாம்!

Date:

உரிமை கோராத இணையத்தளங்கள் மற்றும் வெளியிடும் தகவல்களுக்கு பொறுப்பு கூற முடியாத சமூக வலைத்தளங்கள் தொடர்பில் மாத்திரமே சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் சூம் தொழில்நுட்பத்தில் இன்று (20) நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சரவை இணைப்பேச்சாளரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரண, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல பதிலளிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

முகப்புத்தகம், யூட்டீப் முதலான 17 சமூக வலைத்தளங்களில் வெளிவரும் தகவல்களுக்கு பொறுப்பு கூற உரிமையாளர்கள் எவரும் இல்லை என்று குறிப்பிட்ட அவர் நேர்மையான முறையிலும், கௌரவமான முறையிலும் ஊடகங்களை கையாலும் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் முறையிலேயே அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இணையத்தள தணிக்கை தொடர்பில் நாம் கவனம் செலுத்தவில்லை. ஊடகவியலாளர்களின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையிலேயே அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொள்கின்றது. இதன் அடிப்படையிலேயே அமைச்சரவை தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. இந்த நடைமுறை இலங்கையில் மாத்திரம் அன்றி சிங்கபூர், மலேசியா போன்ற பல நாடுகளில் இடம்பெற்று வருகின்றது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதுதொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு:

11. இணையத்தளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பொய்யானதும் திசை திருப்புவதுமான சிறு பேச்சுக்;களிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்குத் தேவையான சட்டத்தை வகுத்தல்.

இணையத்தளங்கள் வாயிலாக பொய்யான தகவல்களை பரப்புதல் மோசமான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதுடன் குறித்த நிலைமைகள் சமூகத்தை பிளவுபடுத்துவதற்கும், வெறுப்புணர்வை பரப்புவதற்கும் மற்றும் ஜனநாயக நிறுவனங்களை பலவீனப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பல நாடுகள் சட்டங்களை வகுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இணையத்தளங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் பொய் பிரச்சாரங்களால் ஏற்படும் பாதிப்புக்களில் சமூக பாதுகாப்புக்காக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் பிரஜைகளுக்கும் சிவில் சமூகத்தவர்களுக்கும் சரியான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்புக்களை வழங்குவதற்கும் நடடிக்கை எடுக்க வேண்டும். அதற்கமைய குறித்த பணிக்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நீதி அமைச்சரும் வெகுசன ஊடக அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கிரிக்கெட் போட்டிக்கு சென்ற மாணவர்கள் பேருந்து விபத்தில் பலி

கண்டி, புனித சில்வெஸ்டர் கல்லூரிக்கும் வித்யார்த்தா கல்லூரிக்கும் இடையே நடைபெறும் வருடாந்திர...

ஊழல் குற்றச்சாட்டில் பிரசன்ன ரணதுங்கவுக்கு ரூ.25 மில்லியன் அபராதம்!

கொலன்னாவவின் மீத்தோட்டமுல்ல பகுதியில் நிலத்தை மீட்க அனுமதி வழங்குவதற்காக ஒரு தொழிலதிபரிடம்...

இராணுவத்தளபதியை பணியிலிருந்து விடுவித்தது ட்ரம்ப் நிர்வாகம்!

பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத், இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் ராண்டி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்