குஜராத்தில் கைமீறிய கொரோனா: சிகிச்சை மையமாக மாறிய மசூதி…!!

Date:

அகமதாபாத்: குஜராத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மசூதி ஒன்று சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. ஒருபுறம் வைரஸ் பரவல் உயர்ந்து வரும் நிலையில் மறுபுறம் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த தட்டுப்பாடு காரணமாக உள் விளையாட்டு அரங்குகள், வணிக வளாக கட்டிடங்கள், திருமண மண்டபங்கள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டம் ஜகாங்கீர்புரா பகுதியில் உள்ள ஒரு மசூதி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த மசூதியில் 50 நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் 50 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன..

இது குறித்து மசூதி பொறுப்பாளர் கூறுகையில்,

ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் படுக்கை வசதி தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு மசூதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற முடிவு செய்துள்ளோம். ரமலான் மாதத்தில் இதை விட சிறப்பாக செய்வதற்கு வேறு என்ன உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரேநாளில் 11 ஆயிரத்து 403 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 117 பேர் உயிரிழந்துள்ளனர். அம் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 15 ஆயிரத்து 972 ஆக அதிகரித்த்ள்ளது.

spot_imgspot_img

More like this
Related

7 நிபந்தனைகள் நிறைவேறும் வரை ஹோர்முஸ் திறக்கப்படாது

அமெரிக்காவுடன் ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஈரானின் ஏழு...

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கிறார் அமைச்சர்” – நீதிமன்றம் செல்லத் தயாராகும் கடற்றொழில் இணையம்

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கும் கடல் தொழில் அமைச்சருக்கு எதிராக நீதிமன்ற வழக்கினை...

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழில் கைது

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்