குளத்தில் மூழ்கி சிறுவர்கள் பலி!

Date:

திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் குளத்திற்கு குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வனர்த்தம் நேற்று (18) முற்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முள்ளிப்பொத்தானை – ஈச்சநகர் பகுதியைச் சேர்ந்த சுஹைல் சக்தி (13) மற்றும் முள்ளிப்பொத்தானை- 95 யைச் சேர்ந்த அலிப்தீன் அஸ்கார் (13) ஆகியோரே உயிரிழந்தனர்.

நோன்பு பிடித்துக் கொண்டு சிறுவர்கள் சிலர் சேர்ந்து தம்பலகாமம்- முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் உள்ள பரவிப்பாஞ்சான் என்ற குளத்துக்கு குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கியுள்ளனர்.

பின்னர் சிறுவர்கள் மீட்கப்பட்டு கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

போலியோ சொட்டு மருந்து முகாமில் ரீல்ஸ் – தவெக ஒன்றிய செயலாளர் நீக்கம்

விருதுநகரில் போலியோ சொட்டு மருந்து முகாமில் ஆய்வு செய்து, குழந்தைகளுக்கு போலியோ...

இரு முறை சாகித்ய அகாடமி விருது வென்ற கவிஞர் புவியரசு மறைவு

இரு முறை சாகித்ய அகாடமி விருது வென்ற புகழ்பெற்ற எழுத்தாளரும், கவிஞருமான...

புதிய கடற்படை தளபதியாக தமியன் பெர்னாண்டோ நியமனம்!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ரியர் அட்மிரல் தமியன் பெர்னாண்டோவை இலங்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்