கொரோனா குறைந்ததால் எல்லைகள் திறப்பு; கண்ணீருடன் கட்டி அணைக்கும் அவுஸ்திரேலியா- நியூசிலாந்து மக்கள்!!

Date:

ஒரு வருடத்திற்குப் பிறகு எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் நியூசிலாந்து, அவுஸ்திரேலியாவும் தங்கள் எல்லையை திறந்துள்ளன.

இது குறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ கொரோனா பாதிப்பு நியூசிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் குறைந்துவிட்டது. இதனைத்தொடர்ந்து இரு நாடுகளிலும் எந்த கட்டுப்பாடுகளின்றி எல்லைகள் திறக்கப்பட்டுள்ளன. தனிமைப்படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் விமான நிலையங்களில் இரு நாட்டை சேர்ந்தவர்களும் கண்ணீருடன் கட்டி தழுவி அணைக்கும் காட்சிகள் நிரம்பி வழிகின்றன” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்ததைத் தொடர்ந்து நியூசிலாந்து – அவுஸ்திரேலியா எல்லைகள் கட்டுப்பாடுகளுடன் மூடப்பட்டன.

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன.

உலகம் முழுவதும் சுமார் 13 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

 

spot_imgspot_img

More like this
Related

திலீபன் சிலை விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு தெளிவானது – டக்ளஸ்

திலீபனின் சிலை விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதாக...

இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி முகாமைத்துவ, வணிக பீடத்துக்கு விஜயம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்துக்கு, யாழ்ப்பாணத்துக்கான இந்திய...

ரணிலின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்