நேற்று 253 தொற்றாளர்கள்!

Date:

நேற்று 253 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 96,439 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 200 பேர் பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர். சிறைகளில் இருந்து நான்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அதன்படி, மினுவாங்கொட-பேலியகொட கொத்தணி 91,056 ஆக அதிகரித்தது.

அண்மையில் வெளிநாட்டிலிருந்து வந்த 49 நபர்களும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

அதன்படி, 2,852 பேர் தற்போது பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று,  221 நபர்கள் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 92,832 ஆக உயர்ந்தது.

தொற்று சந்தேகத்தில் 370 பேர் மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கல்முனையில் “எமக்கான சமூக நீதி எழட்டும்” ஊடகவியலாளர் சந்திப்பு

முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும், சமூக உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்களின்...

கல்முனை பொலிஸ் நிலையத்தில் 2026ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அணிவகுப்பு மற்றும் பரிசோதனை

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2026 ஆம்...

‘விமானத்தை வீழ்த்த விரும்பினேன்… சாவுக்கு அஞ்சவில்லை’: துணை விமானி ‘பகீர்’!

பெரும்பாலும் இஸ்ரேலியர்களான 170-க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானத்தை, கப்டன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்