பங்களாதேஷ் தொடரில் இலங்கை அணிக்கு புதிய மேலாளர்!

Date:

பங்களாதேஷ் அணியுடனான இரண்டு போட்டி டெஸ்ட் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால மேலாளராக மனுஜ காரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் தொடருக்காக இந்த நியமனத்தை, இலங்கை கிரிக்கெட் மேலாண்மைக் குழுவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா உறுதிப்படுத்தினார்.

தற்போதைய மகளிர் கிரிக்கெட் செயல்பாடுகள் மற்றும் மேம்பாட்டு ஆலோசகராக இருக்கும் காரியப்பெரும, பங்களாதேஷ் தொடருக்கு மட்டுமே இலங்கை அணியின் மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வட்டாரங்களின்படி, பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தின் பின்னர் நீண்ட கால அடிப்படையில் நிரந்தர இலங்கை அணி மேலாளர் ஒருவர் நியமிக்கப்படுவார்.

இலங்கை கிரிக்கெட் கடந்த மாதம் தேசிய அணி மேலாளர் பதவிக்கு விண்ணப்பங்களை கோரியது. இலங்கை அணியின் முன்னாள்  சகலதுறை வீரர் ஃபர்வீஸ் மஹாரூப் இந்த பதவிக்கு விண்ணப்பித்ததாக பகிரங்கமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

‘விமானத்தை வீழ்த்த விரும்பினேன்… சாவுக்கு அஞ்சவில்லை’: துணை விமானி ‘பகீர்’!

பெரும்பாலும் இஸ்ரேலியர்களான 170-க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானத்தை, கப்டன்...

ஒக்டோபர் இறுதிக்குள் முத்தரப்பு பேச்சுவார்த்தை: ஜெலென்ஸ்கி

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய சுற்றுப்...

பேஸ்புக் நண்பரால் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்

ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பருடன் ஏற்பட்ட தகராறின் போது தடியால் தாக்கப்பட்டதில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்