நாட்டில் நேற்று 237 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். இதை தொடர்ந்து, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 96,186 ஆக அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வந்த 78 பேர் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். களுத்துறை மாவட்டத்திலிருந்து 23 பேரும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து 21 பேரும், இரத்னபுரி மாவட்டத்திலிருந்து 20 பேரும், கொழும்பு மாவட்டத்திலிருந்து 18 பேரும், குருநாகல் மாவட்டத்திலிருந்து 18 பேரும், பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து 13 பேரும், கண்டி மற்றும் யாழ் மாவட்டங்களிலிருந்து தலா 9 பேரும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 8 பேரும், புத்தளம் மாவட்டத்திலிருந்து 7 பேரும், கேகாலை மாவட்டத்திலிருந்து 5 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து 3 பேரும், மொனராகலை மாவட்டத்திலிருந்து 2 பேரும், காலி, அனுராதபுரம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இருந்து தலா ஒவ்வொருவர் தொற்றிற்குள்ளாகினர்.