24.2 C
Jaffna
January 21, 2025
Pagetamil
ஆன்மிகம்

சாஸ்திரம் கூறும் 5 ரகசியங்கள் நீங்களும் அதிர்ஷ்டசாலியாகலாம்!

நீங்களும் அதிர்ஷ்டசாலியாகலாம்… சாஸ்திரம் கூறும் 5 ரகசியங்கள்! – அதிகாலை சுபவேளை! – இன்றைய ராசிபலன், பஞ்சாங்கம், இறைதரிசனம்

இன்றைய பஞ்சாங்கம்

இன்று 17. 4. 21 சித்திரை மாதம் 4 – ம் தேதி – சனிக்கிழமை

திதி: பஞ்சமி மாலை 5.59 வரை பிறகு சஷ்டி

நட்சத்திரம்: மிருகசீரிடம் இரவு 11.55 வரை பிறகு திருவாதிரை

யோகம்: சித்தயோகம், எனவே சுபாகரியங்கள் செய்யத் தடை இல்லை.

ராகுகாலம்: காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம்: பகல் 1.30 முதல் 3 வரை

நல்லநேரம்: காலை 7.30 முதல் 8.30 வரை/ பகல் 3.30 முதல் 4.15 வரை

அதிர்ஷ்டசாலி ஆக சாஸ்திரம் சொல்லும் எளிய வழிகள்

பொதுவாக அனைவருமே அதிர்ஷ்டக்காரர்களாக விளங்கவே ஆசைப்படுவோம். அதிர்ஷ்டம் என்றால் கண்ணுக்குத் தெரியாதது என்று பொருள். கண்ணுக்குத் தெரியாத அதிர்ஷ்டம் பலரையும் வெற்றியாளனாக மாற்றிவிடும். ஒரு துறையில் வெற்றிபெற்றவரை, ராசிக்காரர் என்று சொல்லும் வழக்கம் உண்டு. நல்ல மருத்துவரைக் கைராசிக்காரர் என்றும் நல்ல வக்கீலை வாக்கு ராசிக்காரர் என்றெல்லாம் நாம் சொல்கிறோம் அல்லவா அதன் காரணம் அவர்கள் செயல்பாடுகளில் அவர்களின் திறமையையும் தாண்டி ஓர் அதிர்ஷ்டம் அவர்களை அங்கு கொண்டு நிறுத்துகிறது என்று நாம் நம்புகிறோம். திறமை இல்லாமல் ஒருவன் வெற்றியாளனாக முடியாது. ஆனால் அதே நேரம் திறமை மட்டுமே போதுமானதாகவும் இருப்பதில்லை என்பதை நம் வாழ்வில் கண்கூடாகக் காண்கிறோம். சிலர் வெற்றியாளர்களையும்விடத் திறமைசாலிகளாக இருந்தும் வாய்ப்பின்றி இருப்பதற்குக் காரணம் அதிர்ஷ்டம் இன்மையே என்று நம்புகிறோம்.

இயல்பாக ஒவ்வொருவருக்கும் அமையும் இப்படிப்பட்ட அதிர்ஷ்டத்தை நாம் செயற்கையாக அடையமுடியுமா என்று கேட்டால் அதற்கு நம் சாஸ்திரங்கள் முடியும் என்றே சொல்கின்றன. இதற்கு அது காட்டும் வழி மிகவும் எளிமையானது. இதில் பல சூட்சுமங்களும் உள்ளன. பொதுவாகவே வழிபாடுகள் நம்மை இறைவனின் அருளுக்குப் பாத்திரமாக்கும் என்பதை நாம் அறிவோம். அதுவே அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் செய்யும் வழிபாடுகள் நம்மை அதிர்ஷ்டத்துக்கு அருகே கொண்டு சென்று நிறுத்தும் என்கிறது சாஸ்திரம். பிரம்ம முகூர்த்தத்தில் செய்யும் குருவழிபாடு, இறைவழிபாடு, தியானம் ஆகியன மிகவும் முக்கியமானவை என்கிறது.

 

இன்றைய சுருக்கமான ராசிபலன் 17.4.21

மேஷம் – தன்னம்பிக்கை : மனதில் தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும். செயல்களும் அனுகூலமாகும். குடும்பப் பெரியவர்களின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். – நம்பிக்கையே வாழ்க்கை!

ரிஷபம் – பணவரவு : எதிர்பாராத பணவரவு ஏற்படும் நாள். குடும்ப உறுப்பினர்களின் தேவையை நிறைவேற்றுவீர்கள். புதிய முயற்சிகளில் மட்டும் கூடுதல் கவனம் தேவை. – ஆல் இஸ் வெல்!

மிதுனம் – சாதகம் : குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் மூலம் பணவரவுக்கும் வாய்ப்புண்டு. செயல்கள் அனைத்தும் பிற்பகலுக்கு மேல் சாதகமாகும். – சாதகமான ஜாதகம் இன்று!

கடகம் – மகிழ்ச்சி : எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் தேடிவந்து உதவுவார்கள். குடும்பத்தில் இருந்த மன வருத்தங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். – என்ஜாய் தி டே!

சிம்மம் – ஆதரவு : குடும்பத்தினர் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவு தருவார்கள். கேட்டிருந்த உதவிகளும் கிடைக்கும். உங்கள் ஆலோசனைகள் பாராட்டப்படும். – இனி எல்லாம் சுபமே!

கன்னி – அலைச்சல் : குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றச் சிறு அலைச்சலை மேற்கொள்ள வேண்டிவரும். மற்றபடி செயல்கள் அனுகூலமாகும். மகிழ்ச்சியான நாள். – ரிலாக்ஸ் ப்ளீஸ்!

துலாம் – அனுகூலம் : செயல்கள் அனுகூலமாகும். நேற்றுவரையிருந்த குழப்பங்கள் விலகும். புதிய தெளிவு பிறக்கும். முக்கிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் மேற்கொள்ளலாம். – நாள் நல்ல நாள்!

விருச்சிகம் – கவனம் : இறைவழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய சந்திராஷ்டம நாள். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. – டேக் கேர் ப்ளீஸ்!

தனுசு : ஆதாயம் : எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உதவுவார்கள். குடும்பத்தினர் உங்கள் மனதைப் புரிந்துகொண்டு உதவுவார்கள். – ஜாலி டே!

மகரம் – பிரச்னை : சகோதர உறவுகளால் சிறு பிரச்னை ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு இருக்காது. முயற்சிகள் அனைத்தும் சற்று இழுபறியாகவே முடியும். – இறைவன் இருக்க பயம் ஏன்!

கும்பம் – ஆரோக்கியம் : உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். தாய்வழி உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போங்கள். – ஹெல்த் இஸ் வெல்த்!

மீனம் – மன உறுதி : மனதில் நம்பிக்கையும் உறுதியும் அதிகரிக்கும் நாள். கடன் ஒன்றை அடைக்கும் அளவுக்கு சிலருக்குப் பணவரவு ஏற்படும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள். –

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மீனம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

கும்பம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

மகரம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

தனுசு ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

விருச்சிகம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

Leave a Comment