நடிகர் விவேக்கை ஏன் காப்பாற்ற முடியாமல் போனது?: மருத்துவமனை விளக்கம்!

Date:

நடிகர் விவேக் மரணம் தொடர்பில், அவர் சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனை விளக்கமளித்துள்ளது.

நேற்று முன்தினம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் சினிமா படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் விவேக், படப்பிடிப்பிற்கு பின்னர் வீடு திரும்பிய போது மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த விவேக், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணிக்கு உயிரிழந்தார். இதுகுறித்து சிம்ஸ் மருத்துவமனை விளக்கம் அளித்திருக்கிறது.

சிம்ஸ் மருத்துவமனையின் துணைத் தலைவர் ராஜீவ் சிவசாமி, ‘நடிகர் விவேக் நேற்று காலையில் பதினோரு மணிக்கு அனுமதிக்கப்பட்டார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது விவேக்கிற்கு சுயநினைவு நாடித்துடிப்பு இல்லை. உடல் நிலையை பரிசோதித்து உடனடியாக அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டது. இதன் பின்னர் விவேக்கின் உடல்நிலை மோசமாகவே இருந்தது. விவேக்கின் இதயம் பலவீனமாக இருந்ததால் சிகிச்சை பலன் அளிக்கவில்லை’என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

முல்லைத்தீவில் இரு மீனவர்கள் மாயம்

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல்...

யாழில் பியர் போத்தலால் தாக்கப்பட்டவர் பலி

யாழ்ப்பாணத்தில் பியர் போத்தலால் தாக்கப்பட்டதில் 36 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டதாக...

ரீல்ஸ் எடுக்க 60 அடி உயர தண்ணீர் தொட்டியில் ஏறிய சிறுவன் உயிரிழப்பு

உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த் நகரில், ரீல்ஸ் எடுப்பதற்காக 60 அடி உயர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்