கிளிநொச்சியில் விபரீத முடிவெடுத்த இளைஞன்!

Date:

கிளிநொச்சி கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் கோணாவில் மத்தியில் இளைஞர்
ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

நேற்றிரவு (15) இச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என உறவினர்கள்
தெரிவித்துள்ளனர். வீட்டின் பின்பகுதியின் கூரையில் கயிற்றினால்
தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

கோணாவில் மத்தியை சேர்ந்த செல்வநாயகம் விதுசன் வயது 25 என்ற இளைஞனே
தவறான முடிவெடுத்து இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

இதேவேளை கடந்த வாரம் இதே பகுதியைச் சேர்ந்த திருமணமான இளம் யுவதி
ஒருவரும் தீயிட்டு தற்கொலை செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்டத்தில் சமீப காலமாக தற்கொலைகள், அதிகரித்து
வருகின்றதோடு குறிப்பாக இளம் சமூகத்தினர் அதிகளவில் தற்கொலை
செய்துகொள்கின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சுட்டிக்காட்டத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

இந்திய ஐரெக் பயிற்சிபெற்ற இலங்கையர்கள் அமைப்பு கொழும்பில் அங்குரார்ப்பணம் !

இந்தியா வெளிவிவகார அமைச்சின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ்...

உலக முட்டை தினம்: நாவிதன்வெளியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டைகள் வழங்கி வைப்பு

உலக முட்டை தினத்தை முன்னிட்டு நாவிதன்வெளி அரச கால்நடை வைத்தியர் அலுவலகத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்