திடீர் போராளியாக களமிறக்கப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் வேலன் சுவாமி ஊடக வட்டாரங்களிடமிருந்து தலைமறைவாகி விட்டார்.
சும்மா இருந்த தேரை தெருவில் இழுத்து விட்டது மாதிரி, சும்மா இருந்த வேலன் சுவாமியை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியில் யாரோ ஒரு “பார்ட்டி“ இழுத்துவிட்டு, அரசியல் ஆசையை ஊட்டி விட்டது போலிருக்கிறது.
காரணம், அவர் வடக்கு முதலமைச்சர் பொதுவேட்பாளராக களமிறக்கப்படலாமென க.வி.விக்னேஸ்வரன் ஒரு பொருத்தமற்ற கூற்றை முன்வைத்திருந்தார். இந்த கூற்றை வேலன் சுவாமிகளும் உள்ளூர ரசிப்பதை போலவே தெரிகிறது.
அவரது கருத்தை அறிய ஊடகங்கள் பலத்த முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும், அவர் யாருக்கும் பதிலளிக்கவில்லை.
இப்பொழுது, ஊடகங்களிடம், முதலமைச்சர் பொதுவேட்பாளராக களமிறங்க தயாரில்லையென கூறினால் பின்னாளில் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதில் கூட சங்கடம் தோன்றலாம்.
அதேவேளை, களமிறங்க தயார் என கூறினால், அடிமனதிலுள்ள அரசியல் ஆசை அம்பலமாகி விட்டது என்ற விமர்சனங்கள் வந்து விடும்.
இந்த விடயங்களையலெ்லாம் கூட்டிக்கழித்து பார்த்து, அவர் ஊடக வட்டாரங்களில் இருந்து தலைமறைமாக- அதாவது யாருக்கும் பதிலளிக்காமல்- இருக்கக்கூடும்.
அல்லது, அரசியலுக்கு புதியவரான அவர் இந்த சூழலை எப்படி சமாளிப்பதென தெரியாமல், யாருடைய தொடர்புமின்றி -ஊடகங்களிடமிருந்து தலைமறைவாக- இருக்கலாமென கூறப்படுகிறது.