முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று (12) இடம்பெற்ற விபத்தில் படுகயாமடைந்த படை சிப்பாய் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கெப்பற்றிக்கொலாவ பகுதியினை சேர்ந்த 37 வயதுயுடைய படைச்சி்ப்பா் ஒருவர் விடுமுறையில் வீடு செல்வதற்காக உந்துருளியில் சென்றுகொண்டிருந்த வேளை முள்ளிவாய்க்கால் பகுதியில் கப் வாகனம் மோதித்தள்ளி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது
இதன் போது காயமடைந்த படையினன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அங்கு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தினை ஏற்படுத்திய கப் சாரதி வாகனத்தினை விட்டு தப்பி ஓடியுள்ளார். விபத்து குறித்து முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் வாகனம் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் வாகனத்தின் உரிமையாளரை கண்டறிந்து சாரதியினை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்