நேற்று 263 தொற்றாளர்கள்!

Date:

இலங்கையில் நேற்று (12) மேலும் 263 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 95,394 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 203 பேர் மினுவாங்கொட- பேலியகொட COVID-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 22 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

மினுவாங்கொட- பேலியகொட COVID-19 கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 90,242 ஆக அதிகரித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த 38 நபர்களும் நேற்று COVID-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

தற்போது நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் 3,021 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று, COVID-19 இலிருந்து குணமடைந்த 144 பேர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 91,775 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று சந்தேகத்தில் 247 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

சுவாமி விபுலானந்தர் கலாச்சார மண்டபத்தில் மாணவர்களுக்கு பரீட்சை செயலமர்வு

காரைதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம்...

ஜனாதிபதி விருதைப் பெற்ற சாய்ந்தமருது மாணவன் அன்சார் முஹம்மட் சினான்

இலங்கை சாரணர் சங்கத்தின் உயரிய கௌரவ விருதான ஜனாதிபதி சாரணர் விருதை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்