இந்தியாவில் ஒரே நாளில் 1,61,736 பேருக்கு கொரோனா..

Date:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1,61,736 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1,61,736 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,36,89,453 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து 7 நாட்களாக பரவல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் தொடங்கியபோது ஏற்பட்ட பாதிப்பை தாண்டி ஒரு நாள் தொற்று என்பது 7 நாட்களாக தொடர்ந்து உயர்ந்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 879 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,71,058 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா சிகிச்சை பெற்றவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் 97,168 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,22,53,697 என்றளவில் உள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு 12,64,698பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல், இந்தியாவில் இதுவரை 25,92,07,108 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியா முழுவதும் நேற்று 14,00,122 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதுவரை 10,85,33,085 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

‘அல்வா’ கொடுத்த செல்வம்; மீண்டும் தலைவரானார்: அதிருப்திக்குழு நீதிமன்றத்தை நாடுகிறது!

பெண்ணொருவருடன் சர்ச்சைக்குரிய உறவு தொடர்பான தொலைபேசி உரையாடல் கசிந்ததை தொடர்ந்து தமிழீழ...

உலகளவில் El Niño உருவாகும் சாத்தியம் – பிப்ரவரிக்குப் பிறகு கனமழை எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை உயர்வால் ஏற்படும் El Niño காலநிலை நிகழ்வு,...

காலிமுகத்திடலில் கின்னஸ் சாதனை: 5,000க்கும் மேற்பட்டோர் இணைந்து பரதநாட்டியம்!

கொழும்பில் 5,000க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் இணைந்து கின்னஸ் உலக சாதனை! கொழும்பில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்