முள்ளிவாய்க்கால், தமிழினப்படுகொலை நினைவேந்தல் நினைவு வழமைபோன்று,
திட்டமிட்டபடி, இவ்வாண்டும் மே 18 அன்று, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, காலை
10.30 மணிக்கு இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு என்ற பெயரில் ஊடக அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளத.
அந்த அறிக்கையில்,
முள்ளிவாய்க்கால், தமிழினப்படுகொலை நினைவேந்தல் நினைவு வழமைபோன்று,
திட்டமிட்டபடி, இவ்வாண்டும் மே 18 அன்று, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, காலை
10.30 மணிக்கு தமிழினப் படுகொலை, நினைவேந்தல் முற்றம், முள்ளிவாய்க்காலில்
ஒழுங்கமைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு, தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மகாணங்களிலும் ஏனைய இடங ;களிலும் கறுப்புக் கொடியைப் பறக்கவிட்டும், மே 18 அன்று மாலை 6மணிக்கு ஆலயங்களிலும், கோவில்களிலும் மணி ஒலித்து அக வணக்கம் செலுத்தி, வீடுகளுக்கு முன் விளக்கேற்றி தமிழ்த் தேசிய துக்க நாளை அனுஸ்டிக்கும் படி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினர் கேட்டு நிற்கின்றனர்.
முள்ளிவாய்க்கால் அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்காக மே 18 அன்று
முள்ளிவாய்க்கால் கஞ்சியை பரிமாறுவதோடு, தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டிய
பயணத்தில் வேறுபாடுகளைக் களைந்து, ஈழத்தமிழ்த்தன்மையில் ஒன்றிணைந்து
முள்ளிவாய்க்கால் மையத்தில் மக்கள் இயக்கமாதலின் அவசியத்தையும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினர் வேண்டி நிற்கின்றனர்.
தயவு செய்து தாயகத்தில் ஒருங்கிணைக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக உள்ளுரிலும், புலம்பெயர் தேசத்திலும் நிதி சேகரிப்பில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு வினயமாக வேண்டி நிற்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.