பருத்தித்துறையில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரம்!

Date:

கோவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பருத்தித்துறையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது புதுவருட வியாபாரங்கள் மூலம் சந்தைகளிலும் கடைகளிலும் மக்கள் ஒன்றுகூடும்போது கோவிட் பரவல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் பருத்தித்துறைப் பகுதியில் பொதுசுகாதார பிசோதகர்கள் ஒருவாரமாக தொடர்ந்து தமது கண்காணிப்பு பரிசோதனைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

பருத்தித்துறை, மந்திகை, மானாண்டி சந்தைகள் உட்பட வர்த்தக நிலையங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

முகக்கவசம் அணியாது வியாபாரம் செய்யும் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்ய வரும் வர்த்தகர்களும் பொதுமக்களும் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுவதோடு கோவிட் கட்டுப்பாட்டை மீறும் வர்த்தக நிலையங்கள் மூடப்படுவதோடு சட்டநடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தற்போதயை கொரோனா பரவல் அபாயத்தை முன்னிட்டு பருத்தித்துறையில் சினிமா திரையரங்கையும் மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை...

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்