ஒன்றரை வருடங்களாக வலிகாமத்தை மிரட்டிய திருடர்கள் கைது!

Date:

வலி. வடக்கில் ஒன்றரை வருடங்களாக திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 15 மின் நீர்ப்பம்பிகள், வாகனங்கள் சுத்திகரிப்புக்குப் பயன்படுத்தப்படும் மோட்டர், புள்ளுவெட்டி இயந்திரம் உள்ளிட்ட பெறுமதியான பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

காங்கேசன்துறை, தெல்லிப்பழை ஆகிய இடங்களைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவரும் நேற்றுக் கைது செய்யபட்டனர்.

விசாரணைகளின் போது சந்தேக நபர்களினால் கடந்த ஒன்றரை வருடங்களாக திருடப்பட்டு வந்த பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

காங்கேசன்துறை பிராந்தியத்துக்கு பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஆனந்த ஹொட்டகச்சியின் வழிகாட்டலில் தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மெர்சான் இந்துக்கலா சில்வா மற்றும் குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி ஆனந்த சுமணசிறி தலைமையிலான பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

சந்தேக நபர்கள் இருவரும் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் இன்று முற்படுத்தப்படவுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

விமல் வீரவன்சவிடம் வாக்குமூலம் பதிவு

நீதிமன்ற அவமதிப்புக்கு வழிவகுக்கும் வகையிலான கருத்தை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான...

பழ.நெடுமாறனின் மகன் மாணிக்கம் காலமானார்

உல​கத் தமிழர் பேரமைப்​பின் தலை​வர் பழ.நெடு​மாறனின் மகன் மாணிக்கம் நெடு​மாறன் (வயது...

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: 55 வயது விரிவுரையாளர் கைது

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் பயிற்சி மாணவிகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்