மட்டக்களப்பு கொள்ளையர்களிடமிருந்து கைக்குண்டு மீட்பு!

Date:

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்களின் மோட்டர் சைக்கில் இருந்து கைக்குண்டு ஒன்றை நேற்று (09) மாலை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

அண்மை காலமாக தாளங்குடா, பூசொச்சிமுனை போன்ற பிரதேசங்களில் வீதிகளால் தனிமையில் செல்லும் பெண்களை கொள்ளையர்கள் இலக்குவைத்து மோட்டர்சைக்கிளில் அவர்களை பின் தொடர்ந்து அவர்களின் கழுத்தில் இருக்கும் தங்கச் சங்கிலியை அறுத்து கொண்டு தப்பியோடிவருகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது

இந்த நிலையில் நேற்று தனிமையில் வீதியால் சென்ற பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை மோட்டர்சைக்கிளில் பின் தொடர்ந்து சென்ற கொள்ளையர்கள் அறுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் காத்தான்குடி பூநொச்சிமுனை பகுதியைச் சேர்ந்த 20,19 வயதுடைய இருவரை கைது செய்ததுடன் அறுக்கப்பட்ட 2 பவுண் தங்கச் சங்கிலி ஒன்றையும் கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார்சைக்கிள் ஒன்றையும் மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து மேற்கொண்ட விசாணையில் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டர் சைக்கிளினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டு ஒன்றை மீட்டுள்ளதாகவும் தொடர்ந்து விசாரணை இடம்பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

தமிழ் பெண்கள் இப்படியும் செய்வார்களா?

வத்தேகம, யதிராவன, கீழ் கம்மட பகுதியில் உள்ள ஒரு சாலையோரத்தில், அடித்து,...

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து -  அனைத்துப் பயணிகளும்...

அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதிக்கிறங்கிப் போராட்டம் – பலாலியில் குழப்பம்!

தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில்  போராடிவரும் வலி வடக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்