சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்..

Date:

நீரிழிவு இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை ஆயுள் முழுக்க கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் இது தீவிர உபாதையை உண்டாக்கிவிடும்.சர்க்கரை வியாதி. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் அது சர்க்கரை வியாதி என்று அழைக்கப்படுகிறது. இதன் அறிகுறீகள் வரும்போதே எச்சரிக்கையாக இருந்தால் அதை கட்டுக்குள் வைக்க முடியும்.

சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது அது உடலில் சிறுநீரகம், இதயம், இரத்த நாளங்கள், எலும்புகளையும் கூட பாதிக்கிறது. இதை கட்டுக்குள் வைக்க உதவும் தெய்வீக மூலிகைகள் குறித்து பார்க்கலாம்.

​மூலிகை பொடிக்கு தேவையானவை

வேப்பிலை, வில்வம், அத்தி இலை, முருங்கை இலை, அருகம்புல், நெல்லி, நாவல்,சிறுகுறிஞ்சான்,கீழா நெல்லி,மாவிலை,வெற்றிலை, தும்பை எல்லாவற்றையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடித்து வைக்கவும். இதை கண்ணாடி பாட்டிலில் வைக்கவும். தினமும் உணவுக்கு முன்பாக கால் டீஸ்பூன் அளவு இதை எடுத்து நீரில் கலந்து பொறுமையாக குடிக்கவும்.

 

நுரையீரல் நல்லா இருக்கணுமா? சுத்தமான காற்றை நிரப்ப சரியான நேரம் இதுதான்! இயற்கை மருத்துவ நிபுணர்!

காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் ஆகாரத்துக்கு முன்பு எடுத்துகொள்ளவும். இந்த மூலிகை பொடி தொடர்ந்து எடுத்துவந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை நோயால் வரக்கூடிய உபாதைகளை தவிர்க்க முடியும்.

​ஆகாரம் இப்படிதான் இருக்க வேண்டும்

சர்க்கரை நோயாளிகள் உணவு எடுத்துகொள்ளும் போது அது பாதுகாப்பான உணவாகவே இருந்தாலும் அரை அல்லது முக்கால் வயிறு எடுத்துகொண்டால் போதும். அதே போன்று உணவில் நார்ச்சத்து மிகுதியாக இருக்கும்படி பார்த்துகொள்ள வேண்டும்.

தினமும் மூன்று வேளை உணவில் இரண்டு வேளை மட்டும் சமைத்த உணவை எடுத்துகொள்ள வேண்டும். ஒரு நேரம் இயற்கை உணவு எடுக்க வேண்டும். தானியங்கள், கொட்டைகள், காய்கள், கீரைகள், பழங்கள் போன்றவை உணவில் இருக்க வேண்டும். இயன்ற அளவு சமைக்காத உணவுகளின் மீதும் கவனம் திருப்புங்கள்.

​ஒரு வேளை இயற்கை உணவு

தினசரி உணவில் ஒரு வேளை உணவு இயற்கையானதாக இருக்க வேண்டும். பழங்கள், காய்கறிகள், ஃப்ரூட் சாலட், வெஜிடபிள் சாலட் எடுக்கலாம்.

பழங்களில் பப்பாளி, தக்காளி, மாதுளை, நாவல், கொய்யா, பிளம், நுங்கு, சீத்தாப்பழம், ஆரஞ்சு, அன்னாசி, அத்திப்பழம், மாம்பழம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு ஒரு வேளை உணவுக்கு போதுமானதாக இருக்கும். அதே நேரம் பழத்துண்டுகளை சாப்பிடாமல் பழச்சாறுகளில் இனிப்பு சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு கேடு தரக்கூடும்.

அவசியம் சேர்க்க வேண்டிய காய்கறிகள்

சர்க்கரை நோயாளிகள் இந்த காய்கறிகளை அதிகம் சேர்க்கலாம். வெண்டை, வெள்ளரிக்காய், முட்டை கோஸ், புடலங்காய், நெல்லிக்காய், நூக்கல், முள்ளங்கி, வாழைத்தண்டு, வெண்பூசணி, பேரிக்காய், தேங்காய் போன்றவற்றை சேர்க்கலாம்.

இதனால் உடலுக்கு எந்தவிதமான தீங்கும் நேராது. இதில் பச்சையாக சாப்பிட வேண்டியதை அப்படியே சாப்பிடலாம். இது தீங்கு உண்டாக்காது. சமைத்த உணவுகளிலும் ராகி, கோதுமை, மக்காச்சோளம், பட்டாணி, சோயாபீன்ஸ் போன்றவற்றை சேர்க்கலாம்.

​இயற்கை உணவுகளால் என்ன ஆகும்

இயற்கை உணவுகள் ஆரம்ப கட்டத்தில் கஷ்டமாக இருக்கும். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இதை விரும்ப தொடங்குவீர்கள். இந்த வகையான உணவுகளை தொடர்ந்து எடுத்துகொள்ளும் போதும், மிக உறுதியான உணவு முறைகளை ஆரோக்கியமாக பின்பற்றும் போதும் சர்க்கரை நோய் குறைவதற்கு அல்லது ஆரம்ப கால சர்க்கரை நோய் முந்தைய நிலையில் இருப்பவர்களுக்கு வராமல் இருக்கவும் குணப்படுத்தவும் உதவுகிறது.

இவை இன்சுலின் சுரப்பை மேம்படுத்தும் என்பதால் சர்க்கரை நோய் உண்டாக்கும் பக்கவிளைவுகளை தடுக்கிறது. பார்வை இழப்பு, சிறுநீரக கோளாறு, இதய பாதிப்பு, இரத்தகுழாய் பாதிப்பு, நரம்புகள், எலும்புகள் போன்ற பாதிப்பை தடுக்கவும் செய்கிறது.

 

சர்க்கரை நோய் குறையலியா இந்த பொடி யூஸ் பண்ணுங்க! பாதிப்பும் வராது!

இயற்கை உணவுக்கு மாறுவது நிச்சயம் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க செய்யும்.மூலிகையும், உணவு முறையும் உங்கள் சர்க்கரையை கட்டுப்படுத்தக்கூடும் என்பதை பயன்படுத்திய பிறகு நீங்கள் உணர்வீர்கள்.

குறிப்பு

நீரிழிவு இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையோடு இந்த முறையை பின்பற்ற வேண்டும். சுயமாக சர்க்கரை கட்டுக்குள் வருவதற்குள் மாத்திரைகளை தவிர்த்து இதை கடைப்பிடிக்க கூடாது.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

யாழ் மாவட்ட ஊசி எம்.பி அர்ச்சுனாவின் படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது....

இளம்பெண்ணிடம் ஈவ்டீசிங்: தவெக ஒன்றிய செயலாளர் கைது​

திரு​வாரூர் புதிய பேருந்து நிலை​யத்​தில் இளம் பெண்​ணிடம் ஈவ்​டீசிங் செய்த தவெக...

எரிபொருள் இறக்குமதி செலவு குறைகிறது!

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உச்சத்தை எட்டிய எரிபொருள் இறக்குமதி செலவுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்