யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனிற்கு முதல் மன்னிப்பு வழங்கப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
சற்று முன்னர் தமிழ்பக்கத்துடன் பேசிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரவிக்கையில்,
மணிவண்ணன் முதல்வராகுவதற்கு ஈ.பி.டி.பியும் ஆதரவு தெரிவித்தது. யாழ் மாநகரசபையின் செயற்பாட்டை சிக்கலில்லாமல் நடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பு எமக்கும் உள்ளது. அதேபோல,
இதனால் இன்று ஜனாதபதியுடன், மணிவண்ணன் விவகாரம் தொடர்பில் பேசினேன். அவருக்கு முதல் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொண்டேன்.
எனது கருத்தை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய, அவருக்கு முதலாவது மன்னிப்பை வழங்குவதாக தெரிவித்தார். இனி இன்னொரு சந்தர்ப்பத்தில் அவர் இதுபோல செயற்பட்டால் கடுமையான நடவடிக்கையெடுப்பதாக தெரிவித்தார்.
அவருக்கு மன்னிப்பு வழங்குவதால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படாது. சாதாரண சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டு, அவர் பிணையில் விடுவிக்கப்படுவார்“ என தமிழ் பக்கத்திடம் தெரிவித்தார்.