நாடாளுமன்றத்தில் இன்று அல்லோலகல்லோலப்பட்ட போது, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கும், அமைச்சர் சமல் ராஜபக்சவிற்குமிடையில் சூடான வார்த்தைப் பிரயோகங்கள் இடம்பெற்றன.
இதன்போது, வெளியே வருமாறும் மோதிப்பார்க்கலாமென்றும் சமல் ராஜபக்ச சவால் விடுத்தார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் இல்லாமலாக்கப்பட்ட விவகாரத்தில் உரையாற்றிய பொன்சேகா, 2020ஆம் ஆண்டு அப்போதைய சபாநாயகர் சமல் ராஜபக்சவின் காலத்தில் தனக்கும் இவ்வாறு நேர்ந்ததாக குறிப்பிட்டார்.
இதையடுத்து இருவருக்குமிடையில் வார்த்தை மோதல் ஏற்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1