யாழ்ப்பாணம் புதிய சந்தை தொகுதியில் மேலும் 28 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளில், 28 பேர் தொற்றிற்குள்ளானது தெரிய வந்தது.
முன்னதாக புதிய சந்தை தொகுதியில் இன்று காலையில் 54 தொற்றாளர்களும், இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் 25 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
இதன்படி, யாழ் மாவட்டத்தில் இன்று 107 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
1
+1