5 வருடத்தில் இலங்கையில் 25 இலட்சத்திற்கும் அதிக வாகனங்கள் இறக்குமதி!

Date:

2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 25,15,546 என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இந்த வாகன இறக்குமதிக்காக 1,239 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் எழுப்பிய கேள்வியொன்றுக்கு இன்று (5) நாடாளுமன்றத்தில் பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த காலப்பகுதியில் இலங்கைக்கு 103 நாடுகளிலிருந்து வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

2015 இல் 647,444 வாகனங்கள், 2016 இல் 469,304 வாகனங்கள், 2017 இல் 460,201 வாகனங்கள், 2018 இல் 494,488 வாகனங்களும், 2019 இல் 344,059 வாகனங்களும் இறக்குமதி செய்யப்பட்டன.

spot_imgspot_img

More like this
Related

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன...

மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டுதலின் கீழ், மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம்...

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்