17 வயது சிறுமி, 34 வயது இளைஞனின் காதலிற்கு உதவியதால் 19 வயது யுவதி குத்திக்கொலை!

Date:

பராயமடையாத தனது மகளின் விபரீத காதலிற்கு துணையாக இருந்தார் என 19 வயதான யுவதியை, சிறுமியின் தந்தை குத்திக் கொன்றுள்ளார்.

இந்த அதிர்ச்சி சம்பவம் கலேவெல, பட்டிவெல பகுதியில் நடந்தது. ஏ.பி.ரஷ்மிகா தில்மினி என்பவரே உயிரிழந்தார்.

17 வயதான தனது மகள், 34 வயதான இளைஞனுடன் திருமணம் புரிவதற்கு ஒத்தாசையாக இருந்தார் என கூறியே, இந்த கொலை நடந்தது. 17 வயது சிறுமி தனது வீட்டை விட்டு வெளியேறி, உயிரிழந்த யுவதியின் வீட்டில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 3ஆம் திகதி, தான் பணியாற்றும் புத்தக கடையில் யுவதி நின்ற போது, 17 வயது சிறுமியின் தந்தை அங்கு வந்து யுவதியை கத்தியால் குத்தியுள்ளார்.

படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட யுவதி உயிரிழந்தார்.

இந்த கொலையை புரிந்த 42 வயதானவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கள்ளமண்காரரை காப்பாற்ற முயன்ற 14 பேர் கைது!

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்ய...

முன்னாள் எம்.பி ஜெயானந்தமூர்த்தி காலமானார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி இன்று (21)...

செம்மணி புதைகுழி விவகாரம்: உண்மையை வெளிக்கொணர சர்வதேச விசாரணை அவசியம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான உண்மைகளை முழுமையாக வெளிக்கொணரவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்