கொரோனா தொற்றினால் மேலும் 5 மரணங்கள் இன்று (05) அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 586ஆக உயர்ந்துள்ளது.
இன்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம் வருமாறு-
பத்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த, 80 வயதான பெண் ஒருவர், மொரட்டுவை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் இன்று (05) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், பக்டீரியா தொற்று காரணமாக ஏற்பட்ட குருதி விஷமடைவு அதிர்ச்சி நிலை, நிமோனியா நிலை, கொவிட்-19 தொற்று மற்றும் உக்கிர சிறுநீரக சிதைவடைவு என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 10 (மருதானை/ மாளிகாவத்தை) பிரதேசத்தைச் சேர்ந்த, 67 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று (04) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் நாட்பட்ட நுரையீரல் நோயின் உக்கிரம் மற்றும் உயர் இரத்த அழுத்த நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பிரதேசத்தைச் சேர்ந்த, 71 வயதான ஆண் ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று (04) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், மேல் இரைப்பை குடலில் இரத்தப் போக்குடன் இரத்த இழப்பு நிலை மற்றும் கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட நிமோனியா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த, 77 வயதான ஆண் ஒருவர், IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று (04) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று, இருதய நோய் நிலை, உயர் இரத்த அழுத்த நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 10 (மருதானை/ மாளிகாவத்தை) பிரதேசத்தைச் சேர்ந்த, 71 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று (04) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் நுரையீரல் வரை வரை பரவிய புற்றுநோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.




