வர்த்தக நிலையங்களில் பரிசோதனை

Date:

தேசிய உணவு பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் வர்த்தக நிலையங்கள் பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் எதிர்வரும் சித்திரை புதுவருடப் பிறப்பு மற்றும் நோன்பு பெருநாளை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் காணப்படும் வர்த்தக நிலையங்கள் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரி.நஜீப்கான் தலைமையில் பரிசோதனை செய்யும் நடவடிக்கை இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இதன்போது வர்த்தக நிலையங்களில் உள்ள பொருட்களின் காலாவதி திகதி மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், கொரோனா பாதுகாப்பு தொடர்பில் சுகாதார விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் பரிசோதனை செய்யப்பட்டது.

நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

மதுபானசாலைகளற்ற வலி வடக்கில் மதுபானசாலைக்கு அனுமதியா?” — வீதியில் இறங்கிய மக்கள்

மதுபானசாலைகளற்ற பிரதேசமாக காணப்படும் வலி வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு...

“திலீபன் சிலை எங்கே?” — யாழ் மாநகர சபை அமர்வில் வெடித்த கடும் வாக்குவாதம்!

தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை...

சவுதி விமான நிலைய தாக்குதல்களில் 3 பேர் பலி

சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் அப்கா ஆகிய இடங்களில் உள்ள விமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்