வவுனியா செட்டிகுளத்தில் சமுர்த்தி உத்தியோகத்தரொருவரை பொதுமகன் ஒருவர் தாக்கியதால் அரச உத்தியோகத்தர்களாகிய தாம் கடமைக்கு செல்வதற்கு பாதுகாப்பு தேவை எனவும் தாக்கிய நபருக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க கோரியும் செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் அரச உத்தியோகத்தர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர்களுடன் கிராம சேவகர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது வன்முறையாளர்களால் அரச ஊழிர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும், அரச உத்தியோகத்தரின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும், அரச உத்தியோகத்தர்கள் மீதூன தொடர் தாக்குதலுக்கு கடும் சட்டத்தினை அமுல்படுத்து போன்ற கோசங்களை எழுப்பியதுடன் பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.
சுமார் ஒரு மணி நேர போராட்டத்தின் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதேச செயலாளர் திருமதி கு. சுலோஜனாவிடம் மகஜரொன்றினையுமு; கையளித்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த 30 ஆம் திகதி சமுர்;த்தி உத்தியோகத்தரை தாக்கிய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.