தைவானில் 40 வயது பெண், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தனது காதலனின் ஆணுறுப்பைக் கத்தரிக்கோளால் அறுத்து கழிவறைக்குள் போட்டுள்ளார்.
தனது காதலன் வேறொருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக அந்தப் பெண் சந்தேகித்ததையடுத்து, இந்த கொலைவெறி செயலை செய்துள்ளார்.
தைவானின் சாங்குவா மாநிலத்தில் இந்தச் சம்பவம் மார்ச் 30ஆம் திகதி நடந்தது. பாதிக்கப்பட்ட 52 வயது ஹுவாங் என்ற அந்த ஆண், இருவரும் தங்கியுள்ள தம் வீட்டில் உணவு சாப்பிட்டதை அடுத்து உறங்கியதாகக் கூறினார். அந்த உணவில் அவரது காதலி தூக்க மருந்தைக் கலக்கியிருக்கக்கூடும் எனச் சந்தேகிக்ப்படுகிறது. ஹுவாங்கின் உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும் அவரது ஆணுறுப்பில் 1.5 சென்டிமீட்டர் அளவு மட்டுமே எஞ்சியுள்ளது.
தான் உணர்ச்சிவசப்பட்டு இந்தச் செயலைச் செய்ததாகவும் இதற்காக தான் வருந்துவதாகவும் அந்தப் பெண் பொலிசாரிடம் தெரிவித்தார்.