மேலும் 3 கொரோனா மரணங்கள்!

Date:

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 3 மரணங்கள் இன்று (01) அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது.

இன்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரங்கள்-

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த, 80 வயதான பெண் ஒருவர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று (31) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், நுரையீரல் தொற்று மற்றும் கொவிட்-19 நிமோனியா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

எஹலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்த, 80 வயதான ஆண் ஒருவர், எஹலியகொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று (31) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா, குருதி விஷமடைவு, உக்கிர சிறுநீரக சிதைவடைவு என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த, 85 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் இன்று (01) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், இடுப்பு என்பு உடைவு மற்றும் கொவிட்-19 நிமோனியா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேல் சென்ற விமானத்தை நடு வானில் கவிழ்க்க முயற்சி?

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஃப்ளைதுபாய்...

எரிபொருள் விலைகள் எகிறின!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்...

திலீபன் சிலை விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு தெளிவானது – டக்ளஸ்

திலீபனின் சிலை விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்