கொடூர விபத்து: சம்பவ இடத்திலேயே 3 பெண்கள் உயிரிழப்பு!

Date:

நுவரெலியா – பதுளை பிரதான வீதியின் ஹக்கல பூங்காவிற்கு அருகிலுள்ள இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கரவண்டியின் மீது, லொறியொன்று வீழ்ந்து குடைசாய்ந்ததினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

பண்டாரவளை – எல்ல பகுதியைச் சேர்ந்த 18, 51 மற்றும் 52 வயதான மூன்று பெண்களே உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, நுவரெலியா போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாரிய வளைவொன்றில் பயணித்துக்கொண்டிருந்த லொறி, கட்டுப்பாட்டை இழந்து, முச்சக்கரவண்டி மீது வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளமை, ஆரம்பகட்ட விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.

இந்த இடத்தில் இதற்கு முன்னரும் பல விபத்துக்கள் நேர்ந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிஷாந்தன்-

spot_imgspot_img

More like this
Related

கல்முனையில் “எமக்கான சமூக நீதி எழட்டும்” ஊடகவியலாளர் சந்திப்பு

முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும், சமூக உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்களின்...

கல்முனை பொலிஸ் நிலையத்தில் 2026ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அணிவகுப்பு மற்றும் பரிசோதனை

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2026 ஆம்...

‘விமானத்தை வீழ்த்த விரும்பினேன்… சாவுக்கு அஞ்சவில்லை’: துணை விமானி ‘பகீர்’!

பெரும்பாலும் இஸ்ரேலியர்களான 170-க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானத்தை, கப்டன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்