போதைப் பொருள் கடத்தி வந்த இலங்கையின் மீன்பிடிப் படகை கேரள மாநிலம் விழிஞ்சியம் அருகே சென்னை மண்டல போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்துள்ளனர்.
அந்தப் படகில் இருந்த 300 கிலோ 323 கிராம் எடை கொண்ட ஹெரோயின், 5 ஏகே.47 துப்பாக்கிகள், ஆயிரம் தோட்டாக்கள், மற்றும் பல முக்கியமான ஆவணங்கள் போன்றவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த 25ஆம் திகதி படகு கைப்பற்றப்பட்டுள்ளது.
‘ரவிஹன்சி’ என்ற அந்த படகில் இருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உளவுத்துறையினர் போதைப் பொருள் கும்பலின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்டு தகவல் அளித்ததன் பேரில் போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
2
+1
+1
+1
1