ஊவா மாகாண தமிழ் கல்வியமைச்சு மீண்டும் கல்வியமைச்சின் கீழ்!

Date:

ஊவா மாகாணத்தில் தனித்து இயங்கிய தமிழ்க் கல்வி அமைச்சு, அதிவிசேட வர்த்தமானி மூலம், பொதுவான கல்வி அமைச்சின் கீழ் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சானது, கடந்த 3 ஆண்டுகளாக, மாகாண வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நீர்வழங்கல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள், கூட்டுறவு விவகார அமைச்சு என்பனவற்றடன் ஒருங்கிணைந்த அமைச்சாக செயற்பட்டு வந்தது.

தமிழ்க் கல்வி அமைச்சு தவிர்ந்த கல்வி அமைச்சு, நிதி, திட்டமிடல், சட்டமும் சமாதானமும், மாகாண உள்ளூராட்சி, மின்சக்தி, வலுசக்தி, நிர்மாணத்துறை, கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் காணி தொடர்பான அமைச்சு என்பனவற்றுடன் ஒருங்கிணைந்த அமைச்சாக செயற்பட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த 17ஆம் திகதிக்கு திகதியிடப்பட்ட குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில்லினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஊவா மாகாண வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நீர் வழங்கல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கூட்டுறவு விவகாரம் தொடர்பான அமைச்சுகளின் விடயதானங்களுடன் ஒருங்கிணைந்து செயற்பட்ட தமிழ்க் கல்வி அமைச்சு, அதிவிசேட வர்த்தமானியின் மூலம் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண நிதியும், திட்டமிடலும், சட்டமும், சமாதானமும், கல்வி, மாகாண உள்ளுராட்சி, மின்சக்தி, வலுசக்தி, நிர்மாணத்துறை, கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் காணி தொடர்பான அமைச்சுடன் தமிழ்க் கல்வி அமைச்சு அதிவிசேட வர்த்தமானி மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இந்தியாவிற்கு ஆடு கடத்தியவர்கள் சிக்கினர்

இலங்கை கடற்படையினர் நேற்று (09) புத்தளம், உச்சமுனைக்கு அப்பால் உள்ள கடல்...

தட்டம்மை பரவல்: 3 சிறைச்சாலைகளிலிருந்து கைதிகள் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்படவில்லை!

தட்டம்மை நோய் பரவல் காரணமாக, மூன்று சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை இன்று...

பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க முறையான தகுதியுடைய ஆசிரியரல்ல: புதிய குற்றச்சாட்டு!

பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, பல்கலைக்கழகம், தேசிய கல்விக்கல்லூரி அல்லது ஆசிரியர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்