24.5 C
Jaffna
February 4, 2025
Pagetamil
இலங்கை

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க அனுமதிக்கப்படாது!

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரங்கள் எதனையும் வழங்குவதற்கு அரசாங்கம் என்ற ரீதியிலோ அல்லது அமைச்சு என்ற ரீதியிலோ நாங்கள் தீர்மானிக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை(30) காலை இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டதன் பின் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் விடையத்தை கையாள்வதில் எமக்கு இரண்டு பிரச்சினைகள் உள்ளது. இந்திய மீனவர்களின் இலுவைப்படகுகள் எமது கடற்பரப்பில் அதிக அளவில் நுழைகின்றது.

அதே போன்று எமது மீனவர்களும் இந்திய எல்லைக்குள் நுழைகின்றனர். இப்பிரச்சினையை கையாள்வது குறித்து நாங்கள் கலந்துரையாடி உள்ளோம்.

அத்துடன் இந்திய இழுவைப்படகுகள் பாரிய அளவில் எமது கடல் எல்லைக்குள் நுழைந்து தடை செய்யப்பட்ட இழுவைப்படகுகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

இதற்கு நாங்கள் பாரிய எதிர்ப்பினையும் வெளிப்படுத்தி உள்ளோம். இதற்கு அமைவாக எமது கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபடுகின்றவர்களை கைது செய்யுமாறு கடற்படையினருக்கும், கடலோர பாதுகாப்பு பிரிவினருக்கும் தொடர்ச்சியாக அறிவுறுத்தல்களை விடுத்துள்ளோம்.

அரசாங்கம் என்ற ரீதியிலோ அல்லது அமைச்சு என்ற ரீதியிலோ அனுமதிப்பத்திரங்கள் எதனையும் வழங்குவதற்கு நாங்கள் தீர்மானிக்கவில்லை என்பதனை தெழிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

யாழில் சிவப்பு குடிநீர் விநியோகம் – அவதியில் மக்கள்

east tamil

அரசாங்கத்தின் மீது சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

east tamil

டிஜிட்டல் கொடுப்பனவுகளின் புதிய யுகம்

Pagetamil

ஐம்பது மீற்றரில் உள்ள பாடசாலை மைதானத்திற்கு ஒரு கிலோ மீற்றர் நடந்து செல்லும் மாணவர்கள்

Pagetamil

புதையல் தோண்டிய இருவர் கைது

east tamil

Leave a Comment