பசறை பேருந்து விபத்து நடந்த இடத்திலிருந்த பாறையை அகற்ற தாமதப்படுத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜெ. எம். முசம்மில், பசறை போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பசறை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள பாறையை அகற்றுமாறு பல சந்தர்ப்பங்களில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், ஆனால் ஆறு மாதங்களாக அது ஏன் அகற்றப்படவில்லை என்று கண்டுபிடிக்க பொலிசாருக்கு அறிவுறுத்தியதாகவும் ஊவா மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள பாறை அகற்றப்பட்டதாகவும், இதுபோன்ற ஆபத்தான இடங்களைப் பார்த்து விபத்து ஏற்படுவதற்கு முன்பு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
பசறை விபத்தில் பதினான்கு பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 33 பேர் காயமடைந்தனர்.